Out of Box

கிங்கா? கிங் மேக்கரா? ரஜினியின் ஜாதகம் என்ன சொல்கிறது? காமராஜர் சொரூபத்தை கண் முன் காட்டும் அறிகுறி!

Oct 30 2020 11:21:00 PM

நான் அரசியலுக்கு வருவது உறுதி! ஆனால் முதல்வர் வேட்பாளர் நானால்ல. தகுதியான ஒரு இளைஞனை முன்னிறுத்தப்போகிறேன் என்கிறார் ரஜினி. சமீப காலமாக அவரது பேச்சை சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. பேச்சில் ஒரு தீர்க்கமான உறுதி தெரிகிறது. இந்த வயதில் அரசியல் எதற்கு என்று கேட்டோரின் முகத்தில் கரி பூசப்பட்டுவிட்டது. வழி காட்டும் கை காட்டி நிறுத்தமாக மட்டுமே இருக்கப்போகிறேனே தவிர, கை பிடித்து அழைத்துச்செல்லும் அதிகாரம் கொண்டவனாக இருக்கப்போவதில்லை என்பதே ரஜினியின் இறுதி முடிவு.

rajini rajini-politics politics

ஆன்மீக அரசியலை முன்னெடுக்கும் ரஜினியின் அரசியல் பின்புலம் பற்றிக்பேசிக்கொண்டிருக்கிறோம். அவர் வழியிலேயே ஆன்மீக ரீதியாக எதிர்காலம் எப்படி இருக்கு என்று பார்த்தால், அதிகாரம் செலுத்தும் ஆட்சியாளனாகும் வாய்ப்பு இல்லை என்றே வருகிறது. சமீபத்தில் ரஜினியின் ஜாதகத்தைப்பற்றி இணையத்தில் தேடிய பொழுது அறிந்துகொண்ட தகவல் இது. ஜாதகப்படி ரஜினுக்கு மகர ராசி, சிம்ம இலக்கனம். ஒரு நாட்டை ஆளும் அதிகாரம் மிக்கவனாகும் யோகம் வர வேண்டும் என்றால், லக்கனத்தில் இருந்து பத்தாம் கட்டத்தில், சூரியன் இடம்பெற்றிருக்க வேண்டும்.

rajini rajini-politics politics

ஆனால் ரஜினிக்கு லக்கனத்தில் இருந்து, நான்காம் இடத்தில் சூரியன் அமைந்து பலம் இழந்துவிடுகிறது. கூடவே சனியின் பார்வையும் படுகிறது. பிறரை ஆளும் பண்பை உண்டாக்கும் செவ்வாய், சந்திரனோடு இணைந்து இருப்பது கூடுதல் பலம். இந்த அமைப்பு இல்லாமல் இருந்தாலும், வலுப்பெற்ற ராஜயோகங்கள் இருக்கவேண்டும். இது தவிர ஒருவரது ஜாதகத்தில் சிம்மம் வலுவானதாக இருந்தால் அவர் மறைமுகமாக அதிகாரம் செலுத்தக்கூடியவராக இருப்பார்.

rajini rajini-politics politics

அதாவது உயர் பதவியில் இருப்பது ஒருவராக இருக்கும். முடிவு எடுப்பது முழுக்க இவருடைய அறிவுறுத்தலின் பேரில் இருக்கும். அரசை இயக்க கூடிய ஆற்றல் கொண்டவராக இருப்பார். இன்னும் புரியும் படி சொல்ல வேண்டும் என்றால், ஆட்சி செய்யும் கிங்காக இல்லாமல், கிங் மேக்கராக இருப்பார். தனக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தும், மூன்று பிரதமர்களை உருவாக்கி கிங் மேக்கரான காமராஜர் போல, ரஜினியும் கிங் மேக்கராக உருவெடுப்பார் என்பதையே ஜாதகமும் சொல்கிறது. பொதுவாக லக்கனத்தில் இருந்து இரண்டாம் கட்டத்தில் சனி அமையப்பெற்றவர்கள், மிகச்சிறந்த நீதிமான்கள், நல்லவை மட்டுமே பேசுவார்கள். ரஜினியின் இந்த குணம் இன்னும் கூடுதல் பலம் சேர்க்கிறது என்பதே உண்மை.