Spellbound

ரஜினியை பிடிக்காதவர்களும் ரஜினி படத்தை ரசித்து பார்க்க காரணம் என்ன? அப்படி என்ன தான் ரஜினியிடம் அனைவரும் விரும்பும் விஷயம் இருக்கிறது?

Jun 01 2021 08:11:00 PM

ரஜினி என்றால் ஆறிலிருந்து அறுபது வயது வரை உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் ஒரு மிகப்பெரிய கலைஞன். இவர் செய்யும் ஸ்டைல் தான் அனைவராலும் அதிகம் ரசிக்கப்படும் விஷயம் என்று அனைவரும் நினைக்கிறார்கள். ஒரு படத்தில் நடிக்கும் ஒரு உச்ச நட்சத்திரம் ஒரு குறிப்பிட்ட காட்சியில் சிறப்பாக நடித்திருந்தால் என்னடா இந்த நடிகர் இப்படி நடிக்கிறாரே என்று ரசிகர்கள் பாராட்டுவார்கள்.

rajini super acting skills movies

அதுவே அந்த நடிகர் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தவில்லை என்றால் இவருக்கு இந்த காட்சியில் நடிக்கவே தெரியல என்று கிண்டல் செய்வோம். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும், நடிப்பில் பழம் தின்னு கொட்டிய போட்ட நடிகராக இருந்தாலும் ஒரு காட்சியிலாவது தனக்கு நடிக்க தெரியவில்லை என்பதைப் போல சில இடங்களில் நடித்திருப்பார். ரஜினியிடம் இருப்பது வெறும் ஸ்டைல் மட்டும்தானா? ஸ்டைலை தவிர அவருக்கு வேறு ஏதும் தெரியாதா?

rajini super acting skills movies

நடிகர் ரஜினிகாந்த் தன் போட்டி நடிகர் கமலைப் போலவே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். ரஜினியின் பழைய காலத்து படங்களை எடுத்துப்பாருங்கள், அவரின் உள்ளே உள்ள சிறந்த நடிகர் வெளிப்பட்டிருப்பார். தற்போது வெளியான கபாலி, காலா படங்களில் கூட ஸ்டைலே இல்லாத கதைக்குத் தேவையான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருப்பார். அண்ணாமலை படத்தில் ஒரு காட்சியில் ரஜினிகாந்த் பாம்பைப் பார்த்து ப யப்படுவார். அப்போது எல்லோரும் அவரைப் பார்த்து சிரிப்போம்.

rajini super acting skills movies

அதற்கு அடுத்த காட்சியில் தன் வீட்டை இடித்த சரத்பாபுவிடம் எப்படி நீ என் வீட்டை இடிச்சு என்ன நடு ரோட்டுக்கு கொண்டுவந்தியோ, அதே மாதிரி நானும் உன்ன நடுத்தெருவில் நிற்க வைப்பேன் என்று சவால் விடுவார். முதல் காட்சியில் பாம்பை பார்த்து ப யந்த நபர் இப்போ ச ண்டை போட்டு சவால் எல்லாம் விடுறாரே என்று யாரும் இதுவரை கேள்வி கேட்கவில்லை.

rajini super acting skills movies

நாம் திரையில் ரஜினி தோன்றிய உடன் அவரோடு ஒன்றாக பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். நீங்க என்னதான் ரஜினியை பிடிக்காதவராக இருந்தாலும் அவருடைய படங்களை பார்க்கும்போது அவர் சிரிக்கும் நேரங்களில் நீங்களும் சிரிப்பீர்கள், அவர் திரையில் அ ழுகும்போது உங்களுக்கும் க ண்ணீர் வரும். இந்த ரஜினிக்கும் ரசிகனுக்குமான உறவு தான் இன்று வரை அவரை சூப்பர் ஸ்டாராகவே வைத்திருக்கிறது.

rajini super acting skills movies