Out of Box

பிரஷாந்த் கிஷோர், ராகுல் காந்தி சந்திப்பு எதற்காக நிகழ்ந்தது? தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தைப் போல இந்தியா முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்தவா இந்த சந்திப்பு?

Jul 15 2021 04:13:00 PM

பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. கூடிய விரைவில் அங்கே தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்காக பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தங்கள் கட்சியின் ஆலோசகராக பிரஷாந்த் கிஷோரை நியமித்துள்ளார். இந்தியாவில் தேர்தல் நேரங்களில் வெற்றி பெரும் கட்சிகளை கணிப்பதில் பிரஷாந்த் கிஷோர் வல்லவர். அதனால் பஞ்சாப் மாநில முதல்வர் இவரை தங்கள் கட்சியின் ஆலோசகராக நியமித்துள்ளார்.

raahul gandhi prashanth kishore meet

தற்போது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் பிரஷாந்த் கிஷோர் இருவரும் சந்தித்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் தங்கள் கட்சியின் வெற்றி குறித்து இருவரும் விவாதித்ததாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் இருவரும் பேசி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

raahul gandhi prashanth kishore meet

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக சரத் பவார் பிரஷாந்த் கிஷோரை தங்கள் கட்சியின் ஆலோசகராக நியமித்துள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது. காங்கிரஸ் கட்சி என்ற ஒரு மாபெரும் கட்சி இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவது என்பது சரத் பவாரால் முடியாத காரியம். எனவே காங்கிரஸ் கட்சியும், சரத் பவாரும் சேர்ந்து பிரசாந்த் கிஷோர் அறிவுரைப்படி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தால் வெற்றி பெறலாம். அதற்கான பேச்சுக்கள் கூட இந்த சந்திப்பில் நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

raahul gandhi prashanth kishore meet