Misc

#Googleshopping: ஆன்லைனில் கண்டிப்பாக வாங்க கூடாத பொருட்கள்!

Mar 23 2020

ஆரம்பத்தில் ஆன்லைன் வர்த்தகத்தின் மீது, மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது மக்கள், ஆன்லைன் வணிகத்தால் திருப்தி அடையும் அளவிற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நாம் பார்த்து பார்த்து வாங்கும், மளிகை பொருட்களையும் காய்கறிகளையும் கூட ஆன்லைனில் வாங்கும் அளவிற்கு நம்பகத்தன்மை உள்ளது. இருப்பினும் ஆன்லைலின் சில பொருட்களை வாங்கி ஏமாந்தவர்கள், எப்போதும் வாங்க வேண்டாம் என பரிந்துரைக்கும் சில பொருட்கள்.

#1. ஆடைகள் வாங்குவது சிலருக்கு தான் ஏற்புடையதாக இருக்கும். ஆடைகள் வாங்கி திருப்தி அடைந்தவர்களை காட்டிலும், தரம் இல்லை, ஆர்டர் செய்த கலர் இல்லை, பிட்டாக இல்லை என புலம்பியவர்கள் தான் அதிகம். சரியான விற்பனையாளரை தேர்ந்தெடுத்து வாங்குவது நல்லது. 

#2. அடுத்து உள்ளாடைகள். சிலசமயம் அளவு பிரச்சனை, சிலசமயம் போலி தயாரிப்புகள் பிரச்சனை.

#3. காஸ்மெட்டிக் பொருட்கள் பெரும்பாலும் போலி தயாரிப்புகளாகத்தான் இருக்கும் என்பது அனுபவ ரீதியாக நேர்கொண்டவர்களின் கருத்து.

#4. இரண்டாம் பட்சமாக(SECOND HAND) வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்கள், பெரும்பாலும் உபயோகமற்றதாக இருக்கும்.

#5. மூக்கு கண்ணாடிகள் வாங்கும் போது பவர்கள் மாறுபடலாம். நேரில் பார்த்து வாங்கும்போதே, நாம் கடைக்காரரிடம் ஆயிரம் குறைகள் சொல்வோம். ஆன்லைனில் டெலிவரி செய்த உடன் கண்ணாடியை மாட்டிக்கொண்டு திருப்தி அடைந்தவர்களே கிடையாது.

#Googleshopping: இதை எல்லாம் கடந்து, ரிட்டர்ன் ‌‌‌‌‌‌‌‌‌எடுத்துக்கொள்ளாத எந்த பொருளையும் வாங்க வேண்டாம் என்பது அனுபவமிக்கவர்களின் கருத்து.    

Top