Spellbound

#workfromhome: வீட்டிலிருந்தே பணி புரிவதில் உள்ள வேடிக்கையான வில்லங்கம்!

Mar 24 2020 11:25:00 PM

இந்தியாவில் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாய்ப்புகள் குறைவு தான். மிகவும் அரிதாகவே வீட்டிலுருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தற்சமயம் கொரோனோவால் ஐடி துறை போன்ற சில துறைகள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் யூடியூபர்கள், ப்ளாக்கர்கள், வீட்டிலிருந்தே ப்ராஜெக்ட் செய்பவர்கள் என ஒரு சில துறைகள் எப்போதும் வீட்டிலிருந்தே வேலை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வாழ்வில் நேர்கொள்ளும் வேடிக்கையான பிரச்சனை உங்களுக்காக.

work-from-home covid-19 youtubers bloggers

#1. கலர் கலராக வாங்கிய உடைகள் எல்லாம் அலமாரியில் இருந்து கொண்டு, நம்மை பார்த்து நக்கலாக ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பது போலவே தோன்றும். 

#2. நமக்கான அங்கீகாரம் என்பது, இங்கு நாம் செய்த வேலையை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. குணம், பழகும் விதமெல்லாம் பெரும்பாலும் அறியப்படாத காரணத்தால், நாம் செய்த வேலை தான் நமக்காக வாதாடும் வக்கீல்.

#3. அடுத்து வீட்டிலிருந்து வேலை செய்கிறோம் என்றால், அடிக்கடி கஜனி முகமது போல வீட்டு ப்ரிட்ஜ்ஜை நோக்கி படையெடுக்க எண்ணுவோம். உடல் எடையும் கொஞ்ச நாட்களிலே கொரோனா போல வேகமாக பரவி விடும்.

#4. மாதத்தில் ஒருமுறை முன்னறிவிப்பின்றி பவர் ஷட் டவுன் எனும் போது, பாடு பெரும்பாடாக மாறிவிடும். அருகில் உள்ள தெரிந்தவர்கள் வீட்டிற்கு மடிக்கணியை தூக்கிக்கொண்டு செல்ல வேண்டும். இதற்காக அவர்கள் நம்மிடம் முகம் சுழிக்காமல் இருக்க வேண்டும். இந்த சூழலுக்காகவே அவர்களிடம் வலுவான உறவை மேம்படுத்தி கொள்ளவேண்டும்.

#5. அலுவலகம் செல்வது போல குளித்து ஆயத்தமாக தேவையில்லை. லேட்டாக எழுந்தாலும் எழுந்த உடனே கணினி முன் அமர்ந்து விடலாம்.

#6. வீட்டில் உள்ளவர்கள் நம்மை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள மாட்டார்கள். அம்மாவோ, மனைவியோ, மகனோ அப்போது தான் தொலைக்காட்சியை சத்தமாக வைத்து பார்ப்பார்கள். நமக்கு வேலை தடைபடும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் என்றால், கண்டிப்பாக தனி அறை இன்றியமையாதது.

#7. அலுவலகத்தில் உள்ளோருடன் ஹாய், பாய் சொல்லாமல், நேரடியாக பார்த்து வேலை செய்யாததால் ஒரு பிணைப்பு இல்லாமல் இருக்கும்.

#workfromhome: சுற்றி இருப்பவர்களை, வீட்டிலிருந்து தான் வேலை செய்கிறேன் என நம்ப வைக்க முடியாது. நம்ப வைக்க முற்பட்டால், ஆயிரம் கேள்விகள் எழும். இத்தனை கேள்விகளுக்கு நீங்க பதில் அளித்தாலும், மற்றவர்களிடம் நம்மை பற்றி கூறுகையில், ஏதோ லேப்டாப் வேலை என ஒரே வார்த்தையில் முடித்து விடுவார்கள்.