His & Her

தீராத பொடுகுத்தொல்லையால் அவதிப்படுறீங்களா? நொடிப்பொழுதில் எல்லாத்தையும் சரி செய்திடலாம்! எந்த ஷாம்புவும் இல்லாமல் பொடுகை நீக்கும் எளிய வழிமுறை!

Dec 29 2021 03:05:00 PM

தலைமுடி பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று. தலையில் பொடுகு வந்துவிட்டால் அது மிகப்பெரும் தொல்லையாக மாறி நம்மை பாடாய்படுத்தும். பொடுகை ஒழித்துக்கட்டுவதற்காக பல வழிமுறைகளை நாமும் பின்பற்றிக்கொண்டு தான் இருக்கிறோம். ஒருவருக்கு பலனளிக்கும் வழிமுறை இன்னொருவருக்கு பலனளிப்பதில்லை. எல்லோருக்கும் பலனளிப்பது போல ஒரு வழிமுறை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

podugu-problem

இன்று நான் சொல்லப்போகும் அந்த விசயம் கண்டிப்பாக எல்லாருக்குமே தீர்வை தரக்கூடியதாக இருக்கும். ஆனால் இது ஆண்களுக்கு தான் பொருந்தும். அது என்னவென்றால் மொட்டை அடித்துக்கொள்வது தான். மொட்டை அடிக்கிறது தான் தீர்வா? அதைவிட்டால் வேறு வழியே இல்லையா என்று புலம்ப வேண்டாம். மற்ற வழிமுறைகளும் இருக்கிறது. இருந்தாலும் எனக்கு தெரிந்து அதை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட இது தான் சிறந்த வழி.

podugu-problem

நீண்ட நாட்களாக எனக்கு பொடுகுத்தொல்லை இருந்தது. பல ஷாம்புவை பயன்படுத்தியும் பிரச்சனை முழுவதும் தீர்ந்தபாடில்லை. அப்போது தான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இந்த வழியை கூறினார். மொட்டை அடித்துவிட்டால் பொடுகு மொத்தமாக நீங்கி விடும். உங்கள் தலையில் மீண்டும் முடி புதிதாக வளர ஆரம்பிக்கும். முடி புதிதாக வளரும் போது பொடுகு வராது. அப்படியே வந்தாலும் முடி கம்மியாக இருக்கும் போது அதை எளிதில் நீக்கி திரும்ப வராமல் பார்த்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.

podugu-problem

பல வழிமுறைகளை பின்பற்றிவிட்டு கடைசியில் தான் மொட்டை அடிக்கும் முடிவுக்கு நானும் வந்தேன். இதில் எந்த கஷ்டமும் இல்லை. மொட்டைத்தலையை அடுத்தவர்கள் கிண்டல் பண்ணுவாங்க என்றெல்லாம் யோசிக்காதீங்க. கிண்டல் அடிக்கிறவங்கள பத்தி கவலைப்பட தேவையில்லை. உங்கள் பிரச்சனையை நீங்கள் தானே தீர்த்துக்கொள்ள வேண்டும். மூன்று அல்லது நான்கு மாதங்களில் முடி வளர்ந்து விடப்போகிறது. எனவே மொட்டை அடிப்பதை நினைத்து வருத்தப்படாமல் அதிக பொடுகுத்தொல்லை இருந்தால் உடனடியாக மொட்டை அடித்து விடுங்கள். மீண்டும் சொல்கிறேன் இது ஆண்களுக்கு மட்டுமே. விருப்பமிருந்தால் பெண்களும் மொட்டை அடித்துக்கொள்ளலாம். பெண்களுக்கு வேறு என்ன வழிமுறைகள் உள்ளது என்பதை விரைவில் கூறுகிறேன்.