Misc

மருத்துவமனைக்கு வழிக்காட்டும் வம்பு உங்க கையில், முதலில் தூக்கி போடுங்க! உயர்தர பிளாஸ்டிக் என டப்பர்வேரை பயன்படுத்தினால் அதிலும் இப்படி ஒரு வில்லங்கமா?

Sep 18 2020 08:52:00 AM

என்னதான் பிளாஸ்டிக் உடலுக்கும் சூழலுக்கும் தீ மையானது என தெரிந்தாலும் கூட ஏதோ ஒரு வகையில் பயன்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். அலுவலகம், வீடு, பேருந்துநிலையம் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் பாட்டிலில் தான் தண்ணீர் அருந்துகிறார்கள். சிலர் தான் சில்வர் வாட்டர் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர்.

 

இப்படி அன்றாடம் நாம் புழங்கி கொண்டிருக்கும் பிளாஸ்டிக் குறித்து கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம். சிலர் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தும் போது, அதன் அடிப்பகுதியை பார்த்திருப்பீர்கள். அதில் சில எண்கள் முக்கோணத்திற்குள் வரைந்திருப்பார்கள் அது எதற்காக என தேடியது உண்டா? 

tupperware plastic-use

எண் 1 என உள்ள பிளாஸ்டிக் எனில், அது crush the bottle after use என வாட்டர் பாட்டிலில் பொறித்திருப்பார்கள். அப்படியானால் இந்த பாட்டிலை ஒருமுறை தான் பயன்படுத்த வேண்டும். நாம் என்ன செய்கிறோம்? வீட்டிற்கு கொண்டு வந்து அந்த பாட்டிலில் நீர் நிரப்பி மீண்டும் பயன்படுத்துகிறோம். மறுமுறை பயன்படுத்தினால் என்ன என நீங்க கேட்க வருவது புரிகிறது. இந்த வகை பாட்டில்கள் பாக்டீரியா வைரஸ் போன்றவை வளர ஏதுவான சூழலை தருவதால் தான் ஒருமுறை பயன்படுத்த வலியுறுத்தியுள்ளார்கள்.

tupperware plastic-use

எண் 2, இவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் ஷாம்பு பாட்டில், சோப்பு டப்பாக்கள் போன்றவை இவற்றால் தான் செய்யப்படுகிறது. இது ஓரளவு பாதுகாப்பானது தான்.

tupperware plastic-use

எண் 3, இது மிக மிக ஆ பத்து நிறைந்தது. எந்த அளவிற்கு என்றால் பு ற்று நோ ய் விளைவிக்கும் அளவிற்கு! குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மை, சிக்கன் மற்றும் சில உணவு பொருட்களை சுற்றி வைக்கும் பிளாஸ்டிக் பைகள் போன்றவை இதனால் தான் செய்யபடுகிறது.

tupperware plastic-use

எண் 4, இது ஓரளவு பாதுகாப்பு தான். அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் இதனால் தான் செய்யபடுகிறது.

tupperware plastic-use

எண் 5, இது பாதுகாப்பானதே, அதாவது ஆ பத்து குறைவு. ஜூஸ் ஸ்ட்ரா, மருந்து பாட்டில், ஐஸ்கிரீம் கப் போன்றவை இதனால் தான் செய்யப்படுகிறது.

tupperware plastic-use

எண் 6, இது மிகவும் ஆ பத்தானது. பிளாஸ்டிக் கப், தட்டு, கரண்டிகள் இவற்றால் தான் செய்யப்படுகிறது.

tupperware plastic-use

எண் 7, பு ற்றுநோ யை ஊக்குவிக்கும் காரணிகள் இந்த வகை பிளாஸ்டிக்கில் அதிகம் அடங்கியுள்ளது. தினமும் பயன்படுத்தும் கேன் வாட்டர்கள், டப்பர்வேர், கம்பியூட்டர் பொருட்கள் எல்லாம் இவற்றால் தான் செய்யப்படுகிறது. உயர்தர பிளாஸ்டிக் என உபயோகப்படுத்தும் டப்பர்வேர் கூட ஆ பத்துதானாம். ஆக எண் 3, 6, 7 வகைகள் மிக ஆ பத்து நிறைந்தவை. பிளாஸ்டிக் என்பது நம் வாழ்வுடன் ஒன்றாக பிணைந்து விட்ட ஒன்று, முழுதாக பயன்பாட்டை நிறுத்த முடியாவிடினும், மேலே சொன்ன ஆ பத்து நிறைந்த பிளாஸ்டிக்கையாவது பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.