HotPicks

தோழி எண்ணுக்கு அடிக்கடி வந்த OTP! ஒரே போன் கால் தான், நம்ம குடுமி அவர்கள் கையில்! சூதானம் பாஸ்!

Sep 16 2020 12:24:00 PM

தோழி ஒருவருக்கு அடிக்கடி ஏதோ ஒரு புது தளத்திலிருந்து OTP எண்கள் வந்து கொண்டே இருந்தன. ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட  OTP மெசேஜ்கள் வந்து கொண்டே இருக்கும். ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலிருந்து ஏதோ பொருள் வாங்கியதாக OTP வரும். அடுத்து சில நேரத்தில் டிண்டர் போன்ற கேளிக்கை தளத்தில் இணைந்ததை உறுதிபடுத்தும் OTP வருகிறது, இறுதியாக ஒரு OTP மெசேஜ் வந்தது பாருங்க, கையில் உள்ள செல்போன் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக ஒரு OTP. 

phone-prank-apps prank-calls

வடிவேல் காமெடியில் வருவது போல்தான், 'அட இருங்கடா' வந்த OTP மெசேஜ்களுக்கே இன்னும் பதில் தெரியல. அதற்குள் என்னடா அனுப்பிகிட்டே இருக்கீங்க என்று தான் மைண்ட் வாய்ஸ் இருந்தது.  இறுதியாக ஆன்லைன் பேங்கிங் வாயிலாகவும் OTP எண்கள் வரும். பேங்க் என்றாலே கொஞ்சம் பதற ஆரம்பித்து விடுவோம் இல்லையா? அப்படித்தான் தோழி உடனே பேங்க் பேலன்ஸ்களை செக் செய்து கொண்டார். அதிலிருந்து எந்த பணமும் எடுத்தது போல தெரியவில்லை.  

phone-prank-apps prank-calls

சில சமயத்தில் இந்த OTP கு ண்டு வீச்சு சரமாரியாக வீசிக்கொண்டே இருந்தது. தோழி சைபர் கிரைமில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். சில ஆராய்ச்சிகளுக்கு பின்னர் தான் தெரிந்தது. இது உண்மையான மோசடி தாக்குதல் அல்ல ஏதோ OTP ப்ராங்க் என்பது தெரியவந்தது. 

phone-prank-apps prank-calls

இது நமது நட்பு வட்டாரத்தில் உள்ள நண்பர்களின் குறும்பு என்பது தெரியவந்தது. இதற்கென பல ஆப்கள் உள்ளதாம். போன் நம்பர் மட்டும் போதும், அந்த குறிப்பிட்ட நபருக்கு மாரடைப்பே வரவைத்துவிடும் அளவிற்கு வில்லங்கம் நிறைந்த விளையாட்டு.

phone-prank-apps prank-calls

விளையாட்டு என்பதை தாண்டி, இங்கு மற்றொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். யாரவது உங்களிடம் 'என்னுடை எண்ணை தவறாக மாற்றி பதிவு செய்துவிட்டேன், அப்படி மாற்றி பதிவிட்டது  உங்களது எண். உங்க எண்ணிற்கு OTP வந்துவிட்டது, பார்த்து சொல்லுங்க' என யாராவது போன் செய்து கேட்டால் அந்த எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிறகு எல்லாமே ஓவர்,  உங்க குடுமி அவர்கள் கையில்!

phone-prank-apps prank-calls

மோசடிகளை தவிர்க்கும் விதமாக, சில தளங்களில் அவை தானாகவே OTP எண்ணை வாசிக்கும் வசதி இருக்கும். செட்டிங்ஸ் உள்ளே சென்று முதலில் அந்த வசதியை முடக்கவும். ஒருவேளை தொடர்ந்து  OTP வந்து கொண்டே இருந்தால், உடனே புகார் செய்து விடுங்கள். நண்பர்களின் விளையாட்டாக இருந்தாலும் கூட இது வில்லங்கம். மோசடிகளுக்கு ஆளாகாமல் இருக்க முதலில் புகார் செய்து விடுவது நல்லது.