மனிதனுக்கு எப்படி உணவு, உடை, இருப்பிடம் தேவையான பொருளோ அதே போல பெட்ரோலும் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. இந்த கொ ரோனா காலகட்டங்களில் இருசக்கர வாகனங்களே ஓட்ட தெரியாதவர்கள் கூட அதிக அளவு பேருந்துகள் இல்லாத காரணத்தால் இருசக்கர வாகனங்கள் வாங்கி ஓட்ட கற்றுக் கொண்டார்கள். வண்டி வாங்குவது பெரிய விஷயம் இல்லை, அதற்கு பெட்ரோல் அடிப்பது தான் தற்போது பெரிய பிரச்சனையாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல் நிலையத்திற்கு எரிபொருள் நிரப்ப சென்றிருந்தேன். என் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பும் பையன் அந்த வேலைக்கு புதியவர் போல. எப்பவும் போல 100 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்பினேன். அந்த பையன் தெரியாமல் அந்த பெட்ரோல் பம்ப்பை மேல் நோக்கி பிடித்திருந்தான். அப்போது 85 ரூபாய் வரை மட்டுமே பெட்ரோல் டேங்க்கில் விழுந்தது. அதற்கு பின்னர் வெறும் சத்தம் மட்டுமே வருகிறது, பெட்ரோல் வரவே இல்லை.
இதை பார்த்த அனைவருக்கும் செம்ம கோவம் வந்துவிட்டது. பின்னர் வந்த அனைத்து வாகனங்களுக்கும் அதே போல மேல் நோக்கி பிடித்து பெட்ரோல் நிரப்பச் சொன்னோம். அனைத்து வண்டிகளிலும் அதே போல 85 ரூபாய்க்கு மேலே பெட்ரோல் வரவில்லை. பின்னர் அந்த பெட்ரோல் உரிமையாளரிடம் அனைவரும் கேள்வி கேட்ட பின்னர் மீதி பெட்ரோலை அனைவருக்கும் நிரப்பி பிரச்சனை பெரிதாகாமல் பார்த்துக்கொண்டார். எல்லோரும் நமக்கு பெட்ரோல் கிடைத்துவிட்டது என்று அப்போதைய பிரச்சனையை முடித்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள்.
உண்மையில் நாம் பெட்ரோல் நிரப்பும்போது இதைப் போன்று 100, 200 ரூபாய்க்கு சில்லறையாக பெட்ரோல் நிரப்பினால் மோ சடிகள் நடக்கத்தான் செய்யும். இதை யாராலும் தடுக்க முடியாது. மாஸ்க் அணிவது எப்படி கட்டாயமோ அதே போல இவர்களும் பம்ப்பை தூக்கி பிடித்து பெட்ரோல், டீசல் அடிப்பது கட்டாயம் என்னும் சட்டம் வந்தால் தான் இந்த மாதிரி தி ருட்டுகளை நாம் தடுக்க முடியும்.
நீங்கள் லிட்டர் கணக்கில் பெட்ரோல் அடித்தால் மட்டுமே உங்கள் காசை நீங்கள் சேமிக்க முடியும். எல்லா பெட்ரோல் பங்குகளிலும் கிரெடிட், டெபிட் கார்டு வசதிகள் உள்ளது. எனவே இனி பெட்ரோல் நிரப்பும் முன்னர் லிட்டர் கணக்கில் பெட்ரோல், டீசல் நிரப்புவதே சிறந்தது. இல்லை நான் 100 ரூபாய்க்கு தான் பெட்ரோல் அடிப்பேன் என்று நீங்கள் அடம்பிடித்தால் விஜய் மாதிரி சைக்கிளில் தான் வருங்காலத்தில் செல்ல முடியும்.