படத்தை பார்த்த உடனே ஏதோ முதியோர் உதவி வழங்குகிறார்கள் என்று தானே நினைக்க மனம் வருகிறது.?
விடுங்க! விடுங்க!
இன்றைய சூழ்நிலையில் இப்படிதான் நம்மை பழக்கி வைத்துள்ளார்கள். "அகல உழுவதை விட, ஆழ உழுவதே மேல்" என்பது சரியாக புரிந்திருந்தால், இப்படியான குழப்பமே நமக்கு வராது.
மேலே நீங்கள் கண்டது, நாட்டின் நான்காவது உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருதை பெறத்தான் இவர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.
இது காலமும், செல்வந்தர்கள், வணிகர்கள், நடிகர்கள், அரசியல் நடிகர்கள், திருடர்கள், கொள்ளையர்கள், கொலைகாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நாட்டின் உயரிய விருதுகள், இப்போது காலில் செருப்பு கூட போடாத ஒரு சாமானியனின் கைக்கு போகிறது என்றால் நாட்டின் நிலை எந்த அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை உணரலாம்.