Around me

OTTயில் இளசுகளின் கனவு நாயகி நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!!!

Sep 15 2020 07:26:00 PM

தற்போது இருக்கும் சூழ்நிலையில் OTTயில் படங்கள் மட்டும் அல்லது வெப் சீரிஸகளும் அரம்பித்துள்ளது. இந்த வெப் சீரிஸ் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வரிசையில் தற்போது இளசுகளின் கனவு நாயகியான பிரியா பவானிஷங்கர் நடிக்கும் ஒரு வெப் சீரிஸ் வெளியாக உள்ளது

amazon-web-series priya-bhavani-shankar

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர் கே.பாலசந்தர், அவர் தொடங்கிய தயாரிப்பு நிறுவனம் தான்  கவிதாலயா. இந்நிறுவனம் படத் தயாரிப்பு மட்டுமல்லாது டிவி சீரியல்களையும் தயாரித்து வந்தது. மேலும் தற்போதைய டிஜிட்டல் திரையுலகில் முதலில் அடி எடுத்து வைத்தது கவிதாலயா நிறுவனம்தான். இந்த நிறுவனம் 2018ம் ஆண்டு ஹார்மோனி வித் .ஆர்.ரஹ்மான் என்ற தொடரை அமேசான் நிறுவனத்துக்காக தயாரித்துள்ளது.

amazon-web-series priya-bhavani-shankar

தற்போது புதிதாக அமேசான் நிறுவனத்துக்காகத் வெப் சீரிஸ் ஒன்றையும்  தயாரித்துள்ளது. அந்த வெப் சீரிஸ் டைம் என்ன பாஸ் என்ற பெயரில் உருவாகியுள்ளது என்று அதிகார பூர்வமாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளதுஅந்த வெப் சீரிஸில் நடிகர் பரத், ப்ரியா பவானி சங்கர், அலெக்ஸாண்டார் பாபு, சஞ்சனா சாரதி, ரோபோ ஷங்கர், கருணாகரன், மமதி சாரி ஆகியோர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

amazon-web-series priya-bhavani-shankar

அதிலும் நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இதுதான் முதல் வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மாஃபியா.மேலும் அவர் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2வில் நடித்துள்ளர்.  

amazon-web-series priya-bhavani-shankar

 பரத் நடிப்பில் நடுவன் திரைப்படம் உருவாகியுள்ளது. நடுவன் படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் வெளியானது. ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்து வருகிறார் பரத். சல்மான் கான், மேகா ஆகாஷ் இந்த படத்தில் உள்ளனர்.

amazon-web-series priya-bhavani-shankar

ஐடி ஊழியர் ஒருவர் டைம் ட்ராவல் செய்யும் ரூம்மேட்ஸிடம் சிக்கிக்கொள்ளும் கதை தான் இந்த "டைம் என்ன பாஸ்" வெப் சீரிஸின் கதை. இந்த வெப்சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் செப்டம்பர் 18-ம் தேதி முதல் இந்த வெப்சீரிஸ் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகும் என்ற அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது அமேசான். இந்த வெப்வெப்சீரிஸின் இயக்குனர் சுப்பு, இதற்கு சுப்பு மற்றும் கீர்த்தி திரைக்கதை வசனம் எழுதியுள்ளனர்.மேலும் இதற்கு Madley Blues இசைஅமைத்துள்ளது.  

amazon-web-series priya-bhavani-shankar

நடிகை பிரியா பவானி ஷங்கருக்கும் இதுதான் முதல் வெப்சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.தகவல். இவர் கடைசியாக மாஃபியா என்ற படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன்2 வில் நடித்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகை பிரியா பவானி ஷங்கர். அதனால் இவரது ரசிகர்கள் இந்த வெப் சீரிஸை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.