HotPicks

ஞாயிற்றுக்கிழமை கறிக்கடைகளில் நடக்கும் மோசடி? ஒரு வார்த்தை எதிர்த்து கேட்டகாவிட்டால் கிலோவுக்கு 300 ரூபாய் தண்டம் அழ வேண்டி இருக்கும்! ஓவர் கொள்ளை!

Jul 21 2021 06:26:00 AM

இந்த கொரோனா வந்ததிலிருந்து நாக்கு கொஞ்சம் காரசாரமா சாப்பிடச்சொல்லிக் கேட்கிறது. இரண்டு மாதம் சுவையே இல்லாமல் இருந்த பிறகு, இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ருசி தெரிய ஆரம்பித்திருக்கிறது. இனி கவுச்சி அயிட்டமா சாப்பிட்டாத்தான் பழைய படி திருப்தியா சாப்பிட்ட உணர்வு கிடைக்குமென நாட்டுக்கோழி வாங்கப் போயிருந்தேன். அங்கே அதைவிட பெரிய ஷாக் காத்திருக்கு. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு கோழிப்பண்ணை பார்ட்னர்ஷிப் போட்டு வைத்திருந்ததால், கொஞ்சம் கறிக்கடைகளின் பித்தலாட்டம் பற்றித்தெரியும்.

chicken country-chicken chicken-shop

ஒரு ரெண்டு, மூணு கடைக்கு போயிருப்பேன். எங்கேயுமே ஒரிஜினல் நாட்டுக்கோழி கிடையாது. வெளியில் போர்டு மட்டும் தரமான நாட்டுக்கோழி கிடைக்கும் என வெச்சிருக்காங்க. உள்ள போனா அத்தனையும் கிராஸ் ரகம். பெரும்பாலான கறிக்கடைகளில் கிராஸ் கோழிகளை ஒரிஜினல் நாட்டுக்கோழி விலைக்கு விற்கின்றனர். எனக்குத் தெரிந்த வரையில் மற்ற ஊர்களில் இரண்டிற்கும் தனித்தனி விலை உள்ளது. ஆனால் நம் மக்கள் அதைப்பற்றிய கேள்விகள் எழுப்புவதில்லை.

chicken country-chicken chicken-shop

நாட்டுக்கோழின்னு பெயரைச்சொன்னால் போதும், கண்ணை மூடிக்கொண்டு எதிர்கேள்வி கேட்காமல் வாங்கிச்செல்கின்றனர். இதுதான் வாய்ப்பென கருதி கடைக்காரர்களும் முடிந்த அளவுக்கு இலாபம் பார்த்து விடுகின்றனர். கிராஸ் நாட்டுக்கோழியின் விலை தற்போது கிலோ  300 ரூபாய் என்ற அளவிலேயே உள்ளது. ஆனால் ஒரிஜினல் நாட்டுக்கோழியின் விலை கிலோ 650 ரூபாயாகும். கிலோவிற்கு 350 ரூபாய் அதிகம் கொடுத்து இரண்டாம் தர கோழிகளை வாங்குகிறோம்.

chicken country-chicken chicken-shop

கேட்டால் ஒரிஜினல் என்றுதான் சொல்கிறார்கள். நாம் எப்படி ஒரிஜினல் நாட்டுக்கோழி என்று தெரிந்து கொள்வது?இந்த சந்தேகம் உங்களுக்கு வரணும். கிராஸ் கோழியின் பொங்கு சொரசொரப்பாக இருக்கும். மூக்கு மொன்னையாகவும், எடுப்பான மஞ்சள் நிறத்திலும் தட்டையாகவும் இருக்கும். கால்கள் அதே மஞ்சள் நிறத்திலும் கொக்குவைப் போல நீளமாகவும் இருக்கும். கொண்டை ஒரிஜினல் நாட்டுக்கோழியை விடப் பெரிதாக இருக்கும். இது பழக்கப்பட்டவங்களுக்கு தெரிந்துவிடும். இருந்தாலும் மக்கள் கறிக்கடைகளில் தெளிவாகக் கேட்டு முறையிட்டு, அதற்கான விலையை மட்டும் கொடுத்து வாங்குவோம்.