Misc

வெறும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து கோடீஸ்வரர் ஆகலாம். எப்படி தெரியுமா?

Mar 01 2021 06:40:00 PM

நம் எல்லோரின் எண்ணமும் வாழ்க்கையில் கோடீஸ்வரர் ஆகவேண்டும் என்பது தான். நாம் உண்மையாக யாருக்கும் தீங்கிழைக்காமல் கடவுளின் துணையோடு எந்தவித ஏமாற்றமும் செய்யாமல் சில வழிமுறைகளை பின்பற்றினால் கோடீஸ்வரர் ஆகலாம். அதுவும் வெறும் ஒரு ரூபாயை வைத்தே கோடீஸ்வர நிலையை அடையலாம்.

one rupee abisegam crorepathi

வீடுகளில் பெரும்பாலான மக்கள் சிலைகளை வைத்து அபிஷேகம் செய்யும் பழக்கம் இந்தக் கால கட்டத்தில் அதிகரித்து வருகிறது. அந்த சிலைகளுக்கு நாம் பெரும்பாலும் பாலிலும். பன்னீரிலும், தண்ணீரிலும் அபிஷேகம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம்.

one rupee abisegam crorepathi

நாம் 11 ஒரு ருபாய் நாணயங்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அந்த 11 ஒரு ருபாய் நாணயங்களை கொண்டு நம்வீட்டில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் செய்யவேண்டும். அப்படி அபிஷேகம் செய்யும்போது மிகவும் கவனமாகவும், மெதுவாகவும் அபிஷேகம் செய்ய வேண்டும். சில்லறை காசுகள் சிதறாமலும், சத்தம் வராதபடி அபிஷேகம் செய்யவேண்டும்.

one rupee abisegam crorepathi

one rupee abisegam crorepathi

அபிஷேகம் செய்து முடித்த பின்னர் எப்போதும் போல் அந்த சிலைக்கு செய்யும் பால், பன்னீர், தண்ணீர் அபிஷேகங்களை செய்யலாம். அபிஷேகம் செய்த பின்னர் அந்த சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுங்கள். இந்த 11 ஒரு ருபாய் நாணயங்களை வீட்டில் உள்ள மனைவியிடம் கொடுத்து ஒரு ரூபாய் அவரிடம் பெற்றுச் சென்று உங்கள் தொழிலையோ, வேலையையோ ஆரம்பிக்கலாம்.

one rupee abisegam crorepathi

one rupee abisegam crorepathi

இந்த 11 ஒரு ருபாய் நாணயங்களை நீங்கள் கோவில் உண்டியலில் விரும்பினால் போடலாம். இல்லை என்றால் இந்த காசை மீண்டும் அபிஷேகங்களுக்கே பயன்படுத்தலாம். இப்படி நீங்கள் தொடர்ந்து ஒரு ரூபாய் நாணயங்கள் கொண்டு சிலைகளை நம் வீட்டில் அபிஷேகம் செய்துவந்தால் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கூடிய விரைவில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகும் நிலை உண்டாகும். இவை அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற ஆன்மீக பொக்கிஷங்கள். ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ள நண்பர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

one rupee abisegam crorepathi