Spellbound

கத்துக்கிட்ட மொத்த வித்தையும் ஒரே படத்துல காட்டி இப்போ வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறும் இயக்குனர்கள்!

Jul 20 2021 09:49:00 PM

நிறைய படங்களில் சசிகுமார் ஹீரோவாக நடிப்பதால் எல்லோரும் இவரை நடிகர் என்று தான் நினைக்கிறார்கள். ஆனால் இவர் திரைத்துறையில் முதலில் நடிப்பதற்காக வரவில்லை. சுப்ரமணியபுரம் படத்தை இயக்கியவர் தான் நம்ம சசிகுமார். அந்த படத்தில் நடிகராகவும் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் தமிழக அரசு வழங்கியது.

one movie director

முதல் படம் ஆஹா, ஓஹோ என அனைவராலும் கொண்டாடப்பட்டதால் இவருடைய இரண்டாவது படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. 2010 ஆம் ஆண்டு வெளியான ஈசன் படம் சொல்லிக்கொள்ளும்படி ஓடவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை. அதுக்கு அப்புறம் இனி நம்ம படம் இயக்கவே வேண்டாம், படத்தில் நடித்தால் போதும் என்று நினைத்து இன்றுவரை படத்தில் நடித்து சில படங்களை தயாரித்து வருகிறார்.

one movie director

அழகம் பெருமாள் இயக்கிய டும் டும் டும் படம் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாகி இளைஞர்களை மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராக வளம் வருவார் என்று அனைவரும் நினைத்தனர். அதன் பிறகு இவர் எடுத்த ஜூட் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான உதயா போன்றபடங்கள் மிகப்பெரிய அளவில் தோ*ல்வி அடைந்தன. அதன் பின்னர் இவர் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு இப்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

one movie director

மன்மதன் படத்தை சிலம்பரசனுடன் இணைந்து AJ முருகன் இயக்கினார். இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இருந்தாலும் படம் சம்மந்தமான எல்லா நல்ல பெயரையும் சிலம்பரசனே பெற்றார். இன்றுவரை AJ முருகனை மன்மதன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. இப்படி இவங்க எல்லாம் கத்துகிட்ட மொத்த வித்தையையும் ஒரே படத்துல காட்டியதால் இப்போவரைக்கும் மீண்டும் படம் இயக்க முடியாமல் த*வித்து வருகின்றனர்.

one movie director