Around me

டெல்டா போயி ஒமைக்ரான் வந்துடுச்சே! உலகம் இதை தாங்குமா ஆண்டவரே? கொரோனாவின் அடுத்த அலை ஆரம்பிக்கப்போகுதா?

Nov 29 2021 11:30:00 AM

கொரோனாவை பற்றியே இன்னும் எத்தனை நாட்கள் பேசிக்கிட்டு இருக்குறது? போயி உங்க வேலைய பாருங்க தம்பி என்று பலரும் என்னிடம் கூறிவருகின்றனர். ஆனால் என்னால் அப்படி போக முடியவில்லையே. நானோ, நீங்களோ கொரோனாவை விட்டுப்போக ரெடியாக இருந்தாலும், அது நம்மை இடைவிடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது.

omicron-virus new-varinat

கிட்டத்தட்ட 2 வருடங்களாக எங்கு பார்த்தாலும் கொரோனா குறித்த பேச்சு தான். அந்த அளவுக்கு அதனுடைய தாக்கம் உலகம் முழுவதையும் நடுநடுங்க வைத்துள்ளது. தடுப்பூசி வந்து விட்டது, எனவே இனிமேல் படிப்படியாக எல்லாம் மாறிவிடும் என்று நிம்மதி பெருமூச்சு விடலாம் என்று பார்த்தால் இப்போது நமக்கு அடுத்த ஆப்பாக வந்துள்ளது ஒமைக்ரான்.

omicron-virus new-varinat

ஏதோ வித்தியாசமான புதுவித நோயாக இருக்குமோ என்று ரொம்பவும் யோசிக்காதீங்க? கொரோனாவின் மாற்றமடைந்த புதிய வைரசுக்குத்தான் இப்படி ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ்களை விடவும் இது அதிக வீரியம் மிக்கதாக இருக்கிறதாம். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை இது மீண்டும் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கணித்துள்ளனர்.

omicron-virus new-varinat

இந்த புதிய வைரஸ் பாதிப்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பலரும் கொரோனா பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களை தாக்கியுள்ள கொரோனா வைரஸ் மாற்றமடைந்துள்ள ஒமைக்ரான் வகையை சேர்ந்தது என்பது உறுதியாகியுள்ளது.

omicron-virus new-varinat

கொரோனா அடிக்கடி புதிது புதிதாக மரபணு மாற்றம் அடைந்து கொண்டிருப்பதால் இதை கட்டுப்படுத்துவது மருத்துவ உலகுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்த புதிய வகை வைரசுக்கு எதிராக ஏற்கனவே இருக்கும் தடுப்பூசிகள் பலனளிக்குமா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களாகிய நமக்கு மருத்துவ உலகம் கூறும் ஒரே அறிவுரை என்னவென்றால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்பது தான். தேவைப்பட்டால் மட்டும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டில் இருக்கும் மக்கள் தங்களுடைய வீடுகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு முடிந்த வரை பாதுகாப்பாக இருங்க. இதில் பயப்பட எதுவும் இல்லை. இருப்பினும் நாம் எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்தால் பெரிய பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும்.