Hugs & Kisses

கடந்த கால காதல் வாழ்க்கையை மறக்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களில் நீங்களும் ஒருவரா? முன்னாள் காதலை மறப்பதற்கான எளிமையான வழிகள் இதோ!

Jan 12 2022 06:17:00 PM

யாராக இருந்தாலும் தன்னுடைய கடந்த கால காதல் வாழ்க்கையை மறப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். காதலிக்கும் அனைவருமே கல்யாணம் செய்து கொள்வதில்லை. காதலித்தது ஒருவர், கணவர் ஒருவர் என்பது பல நடுத்தர குடும்ப பெண்களும் சந்திக்கும் சாதாரண பிரச்சனை தான். வேறொருவரை திருமணம் செய்து கொண்ட பிறகு பழைய காதலனின் நினைவுகள் வராமல் இருந்தால் பரவாயில்லை. பழைய காதலனின் நினைவு வந்துவிட்டால் அவனை மீண்டும் பார்க்க வேண்டும், பேச வேண்டும் இப்படியெல்லாம் மனதில் எண்ணங்கள் எழ ஆரம்பிக்கும். இதை மட்டும் நாம் சரிசெய்யவில்லை என்றால் குடும்ப வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும்.

breakup-and-marraige old-love

எனக்கு நெருக்கமான தோழி ஒருவர் கடந்த கால காதல் வாழ்க்கையை மறப்பது குறித்து சில வழிமுறைகளை எனக்கு கூறியிருந்தார். அதை உங்களுக்கும் சொல்கிறேன். இதை பின்பற்றினால் உங்களுடைய கடந்த கால காதல் நினைவுகளில் இருந்து எளிதாக மீண்டு வந்து விடலாம்.

breakup-and-marraige old-love

உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை டைரி எழுதுவது மூலம் வெளிப்படுத்துங்கள். ஆனால் அந்த டைரி மிகவும் பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும். உங்களுக்கு தைரியம் இருந்தால் துணிச்சலுடன் கணவரிடம் கடந்த கால வாழ்க்கை குறித்து கூறி விடுங்கள். அவருக்கு உங்களுடைய நிலைமையை புரிய வைத்துவிட்டால் அவர் உங்களை தவறாக நினைக்க மாட்டார். ஆனால் வெளியாட்கள் மூலம் உங்களுடைய காதல் விசயம் கணவனுக்கு தெரிய வந்தால் அவர் கண்டிப்பாக உங்கள் மீது கோபப்படுவார்.

breakup-and-marraige old-love

சில காதலர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்து சென்றிருக்கலாம். சிலர் ஜா தி, ம தம் அல்லது பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் பிரிந்திருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் நீங்கள் இப்போது உங்கள் காதலன் அல்லது காதலியை பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருவதை மனதார உணர்ச்சிப்பூர்மாவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் படிப்படியாக அந்த காதல் மு றிவை பற்றி மறக்க முடியும்.

breakup-and-marraige old-love

திருமணமான புதிதில் பலருக்கும் தங்களுடைய கடந்த கால காதல் நினைவுகள் அடிக்கடி வந்து போகும். இதை சமாளிக்க சிறந்த வழி பொழுதுபோக்கு அம்சங்கள் தான். உங்களுக்கு பிடித்த படம் பார்க்கலாம். பிடித்த விளையாட்டை விளையாடலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் வெளியில் எங்காவது டூர் சென்று வரலாம். உங்களுக்கு பிடித்த விஷயங்களில் உங்களுடைய மனதை திசை திருப்பினால் கடந்த கால காதல் நினைவுகள் அடிக்கடி வருவதை தவிர்க்கலாம்.

breakup-and-marraige old-love

உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது தோழியிடம் இந்த பிரச்சனையை கையாள்வது குறித்து கலந்து ஆலோசியுங்கள். உங்களுடைய கஷ்டங்களை சமாளிக்க சிறந்த வழி உங்கள் நண்பர்கள் தான். அவர்களுடன் நேரத்தை செலவிடும் போது பழைய க சப்பான சம்பவங்களை எளிதாக மறக்கலாம். உங்களுக்கு முன்பின் தெரியாத நபர் அல்லது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் உங்களுடைய கடந்த கால காதல் வாழ்க்கை குறித்து ஒருபோதும் பகிர்ந்து விடாதீர்கள். அப்படி செய்தால் இந்த விசயத்தை கொ ளுத்திப்போட்டு உங்களுடைய குடும்பத்தை ஒரே நிமிடத்தில் காலி செய்து விடுவார்கள். எனவே இந்த விசயத்தில் உங்களுக்கு நம்பத்தகுந்த உறவினர் அல்லது நண்பரின் உதவியை மட்டும் நாடுங்கள்.