Misc

#Lamp: எண்ணெய் தீபம் ஏற்றுவது ஏன்? வீட்டுக்குள் பத்து குண்டு பல்பு இருந்தாலும் இதற்கு ஈடாகாது!

Jul 31 2020

இருபது வயது வரைக்கும் எனக்கு சாமி நம்பிக்கையே இல்லாமல் இருந்தது. "பரீட்சைக்கு முன்னாடி விநாயகர் கோவிலுக்கு போயிட்டு போடா" என்று அம்மா சொன்னால், "நான் படிக்குறேன் நான் பரீட்சை எழுதுறேன். அவரை ஏன் போய் பார்க்கணும்" என்று குதற்கமாக பேசிவிட்டு செல்வேன். பிறகு வயது முதிர்ச்சி வர வர, தெய்வத்தின் மீதான நம்பிக்கை தானாகவே வர ஆரம்பித்தது. எந்த பிடிப்புமே இல்லாமல் செல்லும் வாழ்க்கையில், ஆன்மீக நம்பிக்கை எட்டிப்பார்த்தது எனக்குள் ஒருவித புது தெம்பை கொடுத்தது.

lamp lamp-light light

சின்ன வயதில், பய பக்தியுடன் சாமியை வேண்டுபவர்களை பார்த்தால் சிரிப்பு வரும். இப்போது செவ்வாய்க்கிழமையானால் முருகன் கோவிலுக்கு சென்று, மண்டியிட்டு வணங்கி கொண்டிருக்கின்ற எனது நிலையை பார்த்து, மாற்றவர்கள் சிரிப்பார்கள் போல. இருந்தாலும் இதிலும் ஒரு திருப்தி கிடைக்கிறது. ஒவ்வொரு முறை கோவிலுக்குள் சென்று வெளியே வரும் போதும், ஒரு வித மன நிறைவை உணர்கிறேன். மன அழுத்தம் எல்லாம் எங்கே போகிறதென்றே தெரியவில்லை.

lamp lamp-light light

கோவிலுக்கு போனால் கிடைக்கும் அமைதி, இப்போது வீட்டிலும் கிடைக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது. உன்னை இப்படி பார்க்கவே அதிசயமா இருக்குடா என்று அம்மா பிரம்மித்துப்போய் பார்க்கும் அளவுக்கு மாறிவிட்டேன். முன்பெல்லாம் என்னைச்சுற்றி ஒரே எதிர்மறை அலையாக இருக்கும். எதற்கெடுத்தாலும் சிடு, சிடு என்று கோவம் வந்துவிடும். ஆன்மீக உணர்வை அனுபவிக்க தொடங்கிய பிறகு எல்லாமே மாறிப்போச்சு. முதலில் யார் என்ன பேசினாலும், பொறுமையாக காது கொடுத்து கேட்கும் அளவுக்கு பக்குவம் வந்துவிட்டது.

lamp lamp-light light

இந்த சமயத்தில் கோவிலுக்கு போக முடியாது என்பதால், மாலை நேரம் வீட்டில் எண்ணெய் விளக்கு ஏற்றி தெய்வத்தை வணங்குகிறேன். வீட்டில் எத்தனை விளக்குகள் இருந்தாலும், எண்ணெய் விளக்கு ஒளி தரும் உணர்வுக்கு ஈடாகாது. வீட்டில் ஏற்றப்படும் எண்ணெய் விளக்கு, தீய சக்தியை எரித்து, பிராண சக்தியை தரும். வீட்டில் எப்பொழுதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். சிறிய மனக்குழப்பம் இருந்தாலும், கண்ணெதிரே கடவுள் இருப்பதால் மனது அமைதி கொள்ளும். 

lamp lamp-light light

எனக்கான மனநிறைவு எதில் கிடைக்கிறது என்பதை உணர்த்து கொண்டதால், நாட்கள் சலனமின்றி நகர்கிறது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றில் நாட்டம் இருக்கும். அதனை சரியாக அறிந்து பழக்கப்படுத்தி, வழக்கப்படுத்திக்கொண்டால், மன இறுக்கம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. அது உங்களுக்கு பிடித்த மதநம்பிக்கையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம், பொழுதுபோக்காக கூட இருக்கலாம். நமக்கான தேவை நம்மைசுற்றியே இருக்கிறது. இது நான் என் அனுபவத்தில் புரிந்துகொண்டது.