Misc

எண்ணெய் பாக்கெட்டுகளில் 1 லிட்டர் என்பது 910 கிராமாக அளவிடப்பட்டுள்ளதே அது ஏன் தெரியுமா?

Nov 17 2020 03:17:00 PM

சமீபத்தில் நானும் மனைவியும் மளிகை கடைக்கு சென்றிருந்தபோது, சூரியகாந்தி எண்ணெயை மனைவி வாங்கி கொண்டிருந்தார். திடீரென அதில் ஒரு விஷயம் கண்ணை உறுத்தியது. எண்ணெய் பாக்கெட்டின் பின்புறம் 1 லிட்டர் என்பது 910 கிராமாக குறிக்கப்பட்டு இருந்தது. என்னது புதுசா இருக்கே? என்னவாக இருக்கும் என தேட ஆரம்பித்தேன். பொதுவாக Specific Gravity என்பதன் அடிப்படையில் 1 மிலிக்கு இணையாக எத்தனை கிராம் என்பதை பார்த்துக்கொள்ளலாம்.  

cooking-oil sunflower-oil

தண்ணீரின் Specific Gravity என்பது ஒன்று அதனாலே, ஒரு லிட்டர் தண்ணீர் என்பது ஒரு கிலோவுக்கு சமமாக்கப்பட்டது. ஆனால் சமையல் எண்ணெய்களை பொறுத்தவரையில் இந்த Specific Gravity ஒன்றுக்கு குறைவாகவே இருக்கும். 

cooking-oil sunflower-oil

சூரியகாந்தி எண்ணெய்யை பொறுத்தவரையில் Specific Gravity ஆனது 0.914 முதல் 0.918 ஆக இருக்கும். எண்ணெய் மற்றும் தண்ணீரை பொறுத்தவரையில் இரண்டையும் ஒன்றாக கலக்கும் போது, எண்ணெய் மேலேயும் தண்ணீர் கீழேயும் தங்கும். தன்னுடைய Specific Gravity காரணமாக எண்ணெய் மிதக்கிறது. ஒரு பொருளின் Specific Gravity தெரிந்தால் போதும் லிட்டரில் இருந்து கிலோவிற்கும் கிலோவில் இருந்து லிட்டருக்கு எளிதாக மாற்றலாம். 

cooking-oil sunflower-oil

 பத்துலிட்டர் எண்ணெய் என்றால் அதன் Specific Gravity, அதனை கிலோவுக்கு மாற்றும் போது, 10 X 0.916 = 9.16 கிலோகிராமாக அளவிடப்படும். அதேபோல், எண்ணெய் 10 கிலோ என்பது தெரியுமானால், அதனை எளிதாக லிட்டராக மாற்றிவிடலாம். 10 ÷ 0.916 = 10.91 லிட்டர் என எளிதாக கணக்கிட்டு கொள்ளலாம். ஒரு கிலோ எண்ணெய்யைவிட ஒரு லிட்டர் எண்ணெய் சற்று விலை அதிகம். நீங்க எண்ணெய் வாங்கும்போது அது கிலோவா லிட்டரா என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பேக் செய்யப்பட்ட எண்ணெய் என்றால் 1 லிட்டர் 910 கிராமாக அளவிடப்படும். அன்றாடம் நாம் பயன்படுத்தும் சின்ன விஷயம் தான் அதில் தெரிந்துகொள்ள எத்தனை விஷயம் இருக்கு. நான் தெரிந்து கொண்ட தகவலை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.