HotPicks

#Must Try : இரவு தூக்கம் கெடுகிறதா.? உங்கள் இரவையே மாற்றியமைக்கும் பொருள்!

Feb 13 2020

ஆறு மாதத்துக்கு முன்னர் நண்பர்களுடன் புதிதாக ஒரு வீட்டிற்கு மாறியபோது, கொசுவினால் இரவு உறக்கம் என்பதே இல்லாமல் போய்விட்டது. விளக்கை அணைத்த உடன் படையாக வந்து தாக்குதலை தொடங்கிவிடும். அருகில் காலி மனையில் குப்பைகள் கொட்டி, மழை நீரும் சிறிதாக தேங்கியிருக்க, கொசுக்களை விரட்ட கடைகளில் விற்கப்படும் எந்த உபாயமும் மசியவில்லை. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும்பொழுது என் தங்கை பயன்படுத்தும் உபாயத்தை முயன்று பார்க்கலாம் என்று எண்ணியே வாங்கியது இந்த கொசு வலை.

மெத்தை உள்ள கட்டில்கள் மற்றும் தரையில் எளிதாக உபயோகப்படுத்தலாம். மெத்தைகளில் நான்கு மூலைகளில் சரியாக பொருத்திவிட்டால் போதும், தினமும் மடிக்க கூட வேண்டியதில்லை. தரையில் பயன்படுத்தும்பொழுது நான்கு மூலைகள் மேலே தூக்காத வண்ணம் துணி வைத்தால் போதுமானது. உள்ளே ஒரு கொசு வருவதில்லை. இரவு முழுக்க நிம்மதியான உறக்கம் கிடைக்கிறது. இந்த வலை கிங்சைஸ் மற்றும் குயின் சைஸில் கிடைக்கிறது. கிங் சைஸில் இரண்டு பெரியவர்கள் மற்றும் இரு சிறிய குழந்தைகள் தாராளமாக படுத்து கொள்ளலாம். குயின் சைஸ் ஒருவர் மட்டும் உபயோகப்படுத்தும் அளவு உள்ளது.

இதனைப் பயன்படுத்திய பின்னர் எளிதாக மடித்து ஒரு மூலையில் வைத்து விடலாம். இதிலே கொடுக்கப்பட்டுள்ள ஜிப்பை சற்று ஜாக்கிரதையாக கையாள வேண்டும். மற்றபடி கடந்த 6 மாதமாக சிறப்பாக பயனளிக்கிறது. இந்த வலை 600 முதல் 1200 வரை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் விற்கப்படுகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Top