Out of Box

ரோட்டுக்கு மேலே ரோடு போட்டு, உங்க வீட்டை குழியாக மாற்றிவிட்டனரா? இனி காண்ட்ராக்டர் கை அ ரிப்புக்கும், புறங்கை ந க்கலுக்கும் இவரு சரிப்பட மாட்டாரு போலயே!

May 13 2021 02:44:00 PM

சாலைகள் சேதமடைந்துவிட்டால், அந்த இடத்தில் புதிய சாலை அமைக்கப்படும் போது, ஏற்கனவே போடப்பட்ட சேதமடைந்த சாலையை முழுவதுமாக பெயர்த்து எடுத்த பிறகு தான், அதற்கு மேலே சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற விதி இருக்கிறது. எந்த காண்ட்ராக்டரும் இதனை முறையாக பின்பற்றுவது போலத் தெரியவில்லை. ரோடு மேல் ரோடு போட்டு, படியேறி செல்லும் உயரத்தில் இருந்த எங்க வீட்டை, இன்னைக்கு படியில் கீழே இறங்கி செல்லும் நிலைக்கு மாற்றிவிட்டனர்.

road height high-way

ஏற்கனவே சட்டம் சொல்வது என்னவென்றால், ஒரு சாலையின் உயரம் 4 இன்ச் இருக்க வேண்டும். நமது அரசின் விதிமுறையும் அதுதான். அறிவியல் படி, அந்த அளவில் சாலை அமைக்கப்பட்டால், அதன் ஆயுள் ரொம்ப காலம் இருக்கும். ஆனால் ஹை-வே தவிர, நம் ஊரு சாலைகள் 1-2 இன்ச்சை கூட தாண்டாது. அப்புறம் பல இடங்களில் 100 அடி ரோடு என்று கணக்கு காட்டி இருப்பார்கள். அளந்தால் 60-70 அடிதான் தேறும். உதாரணமாக சென்னை 200 அடி சாலை. அளந்தால் 100-120ஐ தாண்டாது.

road height high-way

இப்போது புதிதாக பொறுபேற்றுள்ள தலைமை செயலாளர் இறையன்பு, தமிழகம் முழுக்க அமைக்கப்படும் சாலைகள் முழுவதுமாக பெயர்த்து எடுத்த பின்னரே, அதன் மீது சாலை அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். எந்த சூழலிலும் சாலையின் மட்டத்தை அதிகரிக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார். இது ஏற்கனவே நீதி மன்றம் கூறியது தான். ஆனால் அதை யாரும் பின்பற்றவில்லை. இப்படி நேர்மையாக பணியாற்றும் இறையன்பு செங்கல்பட்டு கலெக்டராக இருந்த போது, மணல் லாரிகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, தார்பாலின் போட்டு மூடாத லாரிகளுக்கு அபராதம் வசூலிக்க கட்டளை இட்டார். ஒரே வாரத்தில் தலைமைச் செயலகத்திற்கு மாற்றப்பட்டார். அப்போதைய முதல்வர் கருணாநிதி.

road height high-way

இவருடைய நேர்மை கட்சிக்காரர்களுக்கு இடஞ்சல். அதனால் அன்றே அதிகாரம் இல்லாத பதவிகளுக்கு மாற்றப்பட்டார். இப்போது தலைமை செயலராக தேர்ந்தெடுத்தது ஆச்சரியம்தான். இவர் இப்பணியில் எவ்வளவு காலம் தாக்குப்பிடிப்பார் என்று தெரியவில்லை. முதலமைச்சர் பார்வையில் செயலராக இருந்து கொண்ட,  பணிகளை நேரில் மேற்பார்வை செய்வது அவ்வளவு சாத்தியமல்ல. அந்த பதவியில் இவர் நிலைப்பது சிரமம். சாலை அமைப்பது குறித்து தற்போது இறையன்பு போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்துவது, அந்தப் பகுதியின் AE கையிலதான் இருக்கு. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.