HotPicks

வீட்டில் டைல்ஸ், கிரானைட் பதிப்பவர்கள் செய்யும் பொதுவான தவறு! வீடு கட்டுபவர்கள் எங்கெல்லாம் ஏமாறுகிறார்கள்?

Jul 19 2021 07:11:00 PM

புதிதாக வீடு வாங்கியவர்களுக்கு வீட்டின் தரைத்தளம் பிடிக்காமல் இருக்கலாம் அல்லது கிரானைட் தளம் போட்டு நாளாகி இருந்தால் கிரானைட் தளம் போட்ட சில இடத்தில் மட்டும் நிறம் மாறி சிவப்பு நிறத்தில் இருக்கும். அப்படி இருக்கும்போது சிலர் டைல்ஸை மாற்றுவார்கள். சிலர் டைல்ஸ் உடைந்து போனால் கூட முழுவதும் மாற்றிவிட்டு மாற்றுவார்கள். 

new-house-design tile-on-tile

அப்போது  மொசைக்கின் மேல் இன்னொரு டைல் போடலாமா? அல்லது இருக்கும் டைல்ஸை மொத்தமாக கொத்திவிட்டு புதிதாக போடலாமா? என்ற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்திற்கான தீர்வாக கண்டிப்பாக இந்த பதிவு இருக்கும்.

new-house-design tile-on-tile

இருக்கும் டைல்ஸை கொத்திவிட்டு அதன்மேல் புது டைலை போட்டால் காசு கூடும் என்பதால் சிலர் இருக்கும் டைல்ஸ் மேலே புது டைல்ஸை போட்டுவிடுவார்கள். இப்படி ஒன்றன் மேல் ஒன்று போடுவதால் உயரம் கூடும் என்பதோடு, தரையோடு ஒரு பிடிமானமின்றி தனியான ஒரு தகடுபோல ஆகிவிடும் என பயந்தே சிலர் பழையதை கொத்தி எடுத்துவிட்டு புதிதாக போடுவார்கள். இப்படி புதிதாக போடுவதால் கண்டிப்பாக செலவானது இரட்டிப்பாக இருக்கும்.

new-house-design tile-on-tile

இதனை தவிர்க்க டைல் ஆன் டைல் முறையில் தரைதளத்தை அமைப்பதே சரியானது. இந்த விஷயத்தில் திறமையான Tile Mason Specialist நபர்களை தொடர்பு கொண்டு செயல்படுத்தலாம். இந்த செயல்முறையில், தற்போதுள்ள மர கதவுகளை பெயர்த்து எடுத்து, தச்சர் கொண்டு கீழே சிறிது அறுத்து எடுத்துவிட்டு பின்னர் புதிய டைலை பொறுத்தி விடுவார்கள். இது மட்டுமே  tile on tile முறையில் கூடுதல் செலவாக இருக்கும். மற்றபடி இருக்கும் டைலை கொத்தி எடுத்துவிட்டு புது டைல் போடுவதற்கு பதில், இருக்கும் டைலின் மேல் புது டைல் போடுவதையே பலர் விரும்புகின்றனர். செலவும் மிச்சம், புத்திசாலித்தனமான செயலும் கூட. புதிதாக வீடு கட்டுபவர்கள் natural கிரானைட் தளம் போடாமல் இருப்பது தான் நல்லது.