Misc

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு சம்பளம் தருவார்களா?

Jul 21 2021 02:30:00 PM

நீயா, நானா மற்றும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு காசு கொடுத்து கூட்டிட்டு வராங்க,  அவங்க எல்லாம் டிவி நிகழ்ச்சிகளில் வேலை செய்யும் ஆட்கள் தான் என்று எல்லா ஊர்களிலும் பேசிக்கொள்கிறார்கள். அந்த மாதிரி யாரையும் காசு குடுத்து எல்லாம் கூட்டிட்டு வரமாட்டாங்களாம். நண்பர் ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதம் செய்த சென்றிருந்தார்.

neeya naana program show

டிவியில் காட்டுவதைப்போலவே நாம் முன்னரே நிகழ்ச்சியில் உள்ள தொலைபேசி எண்ணை அழைத்து பேச வேண்டும். நம்ம அந்த விவாதத்தில் கலந்துகொள்ள தகுதி ஆனவுடன் அவர்கள் சொல்லும்  நேரத்திற்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்ல வேண்டும். அங்க போன உடனே அவங்க நம்மளிடம் கேட்கும் கேள்வி சாப்டீங்களா சார்? என்பதுதான். மதியம் சாப்பாடு போடுவாங்க.

neeya naana program show

அப்புறம் நிகழ்ச்சி ஆரம்பித்தவுடன் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை டீ, ஸ்னாக்ஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்த உடன் மீண்டும் இரவு நேர சாப்பாடு போட்டு நம்மை அனுப்பிவைப்பார்கள். சில நேரங்களில் சிறப்பாகப் பேசும் நபர்களுக்கு மட்டும் பரிசு வழங்குவார்கள். அதேபோல நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினருக்கு காசும், சில பரிசுப்பொருட்களும் வழங்குவார்கள் என்று தொலைக்காட்சியில் வேலை செய்யும் நண்பர் சொல்லி கேட்டிருக்கிறேன்.

neeya naana program show