Hugs & Kisses

இதுக்கெல்லாம் முடிவே இல்லையா? உலகம் இந்த அளவு முன்னேறிக்கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியும் சில மக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்! அது என்ன தீட்டு வீடு?

Aug 24 2021 12:45:00 PM

வெளிநாட்டுகாரர்கள் விண்வெளியில் குடும்பம் நடத்துகிறார்கள், சந்திர மண்டலத்துக்கு உல்லாச சுற்றுலா செல்கிறார்கள். உலகில் பல தொழில் நுட்ப வசதிகள் வந்துவிட்டன. ஆனால் இன்னமும் நம்ம தமிழ்நாட்டில் சில மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இப்போது நாம் பேசப்போகும் விஷயம் பல 100 வருடங்களுக்கு முன்னர் நடந்தது கிடையாது. தமிழ்நாட்டில் தினமும் நடக்கும் ஒரு விஷயம் தான்.

neelagiri kodanaadu house

நீலகிரி மாவட்டத்தில் கொடநாடு அருகில் பாமுடி என்னும் குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒலி வீதி, தீட்டு வீடு என்னும் ஒரு வீடு உள்ளது. இந்த வீடு நடுக்காட்டில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் யாரவது பெண்கள் மா*தவிடாய் அடைந்துவிட்டால் இந்த வீட்டிற்கு சென்று விட வேண்டும்.

neelagiri kodanaadu house

5 நாட்களுக்கு அந்த பெண்களுக்கு தேவையான துணி, மணிகளை எடுத்துக்கொண்டு இந்த வீட்டிற்கு சென்று விட வேண்டும். பாய், தலைகாணி, பெட்ஷீட் போன்ற பொருட்களை அவர்களே துவைத்து பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் அவர்களுக்கு துணையாக சில பெண்கள் இருப்பார்கள். இங்கு மொத்தம் ரெண்டு சிறிய ஒட்டு வீடுகள் இருக்கும்.

neelagiri kodanaadu house

ஒருவேளை யாரும் இல்லாத பட்சத்தில் மா*தவிடாய் ஆன பெண்கள் இங்கே தனியாக தாங்கும் சூழ்நிலைகள் கூட உண்டாகலாம். இரவு நேரங்களில் சில ஆண்கள் வந்து அவர்களிடம் பிரச்சனை செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. சில நேரங்களில் காட்டு நாய், நரி வந்து கூட கதவை பிராண்டுமாம். நம் உலகம் எத்தனையோ தொழிநுட்ப அளவில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும் இன்றளவும் இதுபோன்ற சில மூட நம்பிக்கைகள் நம்ம ஊரில் பின்பற்றிக்கொண்டுதான்  இருக்கிறார்கள். அந்த ஊர் பெண்களை பற்றி யோசிக்கும்போது தான் ரொம்ப க*ஷ்டமாக இருக்கிறது.

neelagiri kodanaadu house