Spellbound

கண்ணாடி மாட்டிகிட்டு நாலு பஞ்ச் டயலாக் பேசிட்டா மட்டும் போதாது! நடிப்பு என்றால் இப்படி இருக்கணும் தம்பி! தரமான நடிப்பின் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த கோலிவுட் நடிகர்கள்!

Jan 13 2022 02:53:00 PM

நூற்றுக்கணக்கான நடிகர்கள் ஹீரோவாக நடிக்கலாம். ஆனால் எல்லாரும் மக்கள் மனதில் பதிந்து விடுவதில்லை. மக்கள் மனதில் பதிந்தாலும் பெரிய நடிகர்களுக்கு கூட அவ்வளவு எளிதில் தேசிய விருது கிடைப்பதில்லை. ரஜினி, விஜய் போன்றோர் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்தாலும் அவர்கள் கூட இதுவரை தேசிய விருதை வாங்கியது இல்லை. ரஜினி பல விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார். இருப்பினும் தேசிய விருது அவருக்கு இன்னும் எட்டாக்கனியாக தான் உள்ளது. எனவே தேசிய விருதை வாங்குவது எவ்வளவு கடினமான காரியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய பதிவில் தேசிய விருது வாங்கியுள்ள சில முக்கிய நடிகர்களை பற்றிக்காண்போம்.

 

1. கமல்

national-award-actors tamil-cinema

கமலுக்கு தேசிய விருது மூன்று முறை கிடைத்துள்ளது. மூன்றாம் பிறை, இந்தியன், நாயகன் ஆகிய படங்களுக்காக மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை கமல் வாங்கியுள்ளார்.

 

2. தனுஷ்

national-award-actors tamil-cinema

குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகராக வளர்ச்சியடைந்த தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த ஆடுகளம் மற்றும் அசுரன் படங்களுக்காக இரண்டு முறை தேசிய விருதை பெற்றுள்ளார்.

 

3. விக்ரம்

national-award-actors tamil-cinema

பிதாமகன் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகராக உயர்ந்த விக்ரம் அந்தப்படத்துக்காக தேசிய விருதை வாங்கினார்.

 

4. பிரகாஷ் ராஜ்

national-award-actors tamil-cinema

வில்லன், குணச்சித்திர நடிகன் என்று பல முகங்களை கொண்ட பிரகாஷ் ராஜ் காஞ்சீவரம் படத்துக்காக தேசிய விருதை வாங்கியுள்ளார்.

 

5. விஜய் சேதுபதி

national-award-actors tamil-cinema

விஜய் சேதுபதியின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அவர் துணிந்து நடித்த அந்த கதாபாத்திரத்திற்காக அவருக்கு தேசிய விருதே கிடைத்துள்ளது. இதற்குமேல் அவர் சாதிக்க என்ன இருக்கிறது?

 

6. எம்.ஜி.ஆர்

national-award-actors tamil-cinema

எல்லாத்துக்கும் டான் என்றால் நம்ம புரட்சித்தலைவர் தான். முதன் முதலில் தேசிய விருது வாங்கிய நடிகர் என்றால் அது நம்ம எம்.ஜி.ஆர் தான். 1971ம் ஆண்டு வெளியான ரிக்சாக்காரன் படத்துக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இந்த பட்டியலில் யாராவது விடுபட்டிருந்தால் தயங்காமல் கமெண்டில் குறிப்பிடுங்கள்.