ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் முன்னணி வீரர்கள் நிறைய பேர் கா யம் காரணமாக பாதியுடன் வெளியேறினார்கள். எப்படியும் இந்திய அணி மண்ணைக் கவ்விவிடும் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர், நட்ராஜ், ஷர்டுல் தாக்கூர், ஷைனி உள்ளிட்டோர் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே அடித்து துவம்சம் செய்தனர்.
சிறப்பாக செயல்பட்ட 6 இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா கார் நிறுவனத்தின் dhar என்ற புதுவகை கார் வழங்கப்படும் என்று மஹிந்திரா நிறுவன உரிமையாளர் செய்திவெளியிட்டார். அவர் சொன்னது போலவே 6 வீரர்களுக்கு Dhar கார் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த யார்கர் கிங் நடராஜும் அந்த ஆறு பேரில் ஒருவர்.
அந்த கார் மஹிந்திரா நிறுவனம் வழங்கியதற்கு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தான் சிறப்பாக பந்துவீச உதவிய தன்னுடைய பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷுக்கு அந்த காரை அன்பளிப்பாக வழங்கினார். சும்மாவே நம்ம நட்டுவை அனைவரும் பாராட்டுவார்கள். காரணம் அவர் நம்மைப்போல் ஏழ்மையான நிலையில் இருந்து படிப்படியாக முன்னேறி இந்த வெற்றியை அடைந்துள்ளார்.
பழசை இன்னமும் மறக்காமல் தனக்கு உதவிய பயிற்சியாளருக்கு அவர் தனது காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளது அவரை மேலும் ரசிகர்கள் கொண்டாட வைத்துள்ளது. நீங்கள் யார்கர் பந்துகள் போடுவதில் மட்டும் கிங் அல்ல, நீங்கள் மனதளவிலும் கிங் தான் நட்டு.