HotPicks

புதுவீடு கட்டுபவர்கள் ஓரிரு வருடத்தில் சந்திக்கும் பிர ச்சனை! மட்டமான காண்ட்ரெக்ட்டர் கையில் வேலையை கொடுக்கும்முன்னர் இதை பற்றி பேசுங்க!

Jun 08 2021 11:03:00 PM

வீடு கட்டிய ஓரிரு வருடத்தில் சுவர்களில் அல்லது தரையில் இருந்து ஓரடி உயரத்தில் ஓதம் அதாவது சுவர் ஈரமாக மாறுகிறதே இது எதனால் என தெரியுமா? பெரும்பாலான வீடுகளில் இந்த பிர ச்சனையை பார்த்ததுண்டு. நாம் கட்டிய வீடு நீர் நிலைகளின் அருகில் இருந்தால், கண்டிப்பாக இந்த பி ரச்சனை ஏற்படுவது வழக்கம். சில நேரம் அடிக்கடி மழை பெய்வதால் கூட இந்த பி ரச்சனை ஏற்படலாம். ஆனால் வருடத்தில் ஐந்து மாதம் மழைபெய்யும் கேரளாவில், இது போன்று வீடுகளில் ஓதம் எழுவதை பார்க்கமுடிவதில்லை. ஆனால் இங்கு புதிதாக கட்டிய வீடு இரண்டே வருடத்தில் ஓதம் எழுந்துள்ளதை பார்க்க முடிகிறது. 

house-construction msand

இப்படி ஓதம் எழுவதற்கு ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். பொதுவான காரணங்கள், சரியாக வேகாத செங்கற்களை பேஸ்மண்ட் வரை உபயோகிப்பது, ஈரமான சூழல், damp proof course அல்லது grade beam அல்லது plinth beam இல்லாமல் போவது basement filling earth செய்முறை என இவற்றில் ஏதாவது குறை இருந்தால் கூட வீடுகளில் ஓதம் ஏற்படலாம். 

house-construction msand

பேஸ்மெண்ட் உள்ளே மணல் கொண்டு நிரப்பும் முன்னர் எல்லா சுவரையும் உள்பக்கத்தில் சிமெண்ட் கொண்டு பூச வவேண்டும். பேஸ்மெண்ட் மட்டத்தில் சிறிய அளவில் பீம் அமைத்தால் சிறப்பாக இருக்கும். விலை மலிவான காண்ட்ரெக்ட்டர் என்றால் இதெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. வீடு கட்டுபவர்கள் மேலே கூறிய எல்லா விஷயத்தையும் உங்களது காண்ட்ரெக்ட்டரிடம் கூறி தெளிவு படுத்திகொள்ளுங்கள். காலம் முழுவதும் வாழக்கூடிய வீடு, இதில் கஞ்சத்தனம் செய்ய வேண்டாம். வீடு கட்டும் விஷயத்தில் மட்டமான காண்ட்ரெக்ட்டரை வேலை செய்யவிட்டால், இப்படித்தான் சின்ன சின்ன விஷயத்திலும் ஏ மாந்து போவோம்.