Out of Box

Tnpsc aspirants கனவு நிஜமாகும் நேரம் வந்தாச்சு! படிச்சு பட்டைய கிளப்ப வேண்டியது தான்..

Feb 03 2020

போன இடமெல்லாம் விதி வெரட்டி வெரட்டி அடிச்சா என்ன பண்றது? அரியர் இல்லாம  இன்ஜினியரிங் பாஸ் பண்ணியும் வேலை கிடைக்காம அரசு வேலைக்கு படிச்சுட்டு, ஒவ்வொரு முறையும் ஒருமார்க் இரண்டு மார்க்ல வேலை மிஸ் ஆகுதுன்னு வருத்தப்பட்டாலும், கான்ஃபிடன்ட் குறையாம அடுத்த எக்ஸாம்க்கு உசுர கொடுத்து படிச்சுட்டு  இருந்தா மீண்டும் அதே ரெண்டு மூனு மார்க்ல போஸ்டிங் மிஸ் ஆகுது. இந்த நிலைமை நாலு அஞ்சு வருஷமா டின்பிஎஸ்சி படிக்கிற எல்லோருக்கும் பொருந்தும். 30வயசு வரை முயற்சி செய்து வெறுத்து போனவர்கள் தான் இங்க மிகுதி. 

tnpsc-students TNPSC tnpsc-aspirants tnpsc-students-life-style

இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்குனு யோசிக்கும் போது தான் ஒரு செய்தி, "கடந்த ஆண்டு எழுதப்பட்ட குரூப் 4 தேர்வில் 99 பேர் முறைகேடு செய்து டின்பிஎஸ்சி தேர்வு எழுதியுள்ளனர்" இதுமட்டுமா..! "2017 இல் குரூப் 2 எழுதியதிலும் முறைகேடு"னு இன்னொரு செய்தி. அடுத்த நாள் வாட்ஸ் ஆப்பில் "நடந்து முடிந்த இரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு" அடுத்து, "குரூப் 2a தேர்வில் சிவகங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாநில அளவில் முதல் 10 இடங்களுக்கு வந்து சாதனை".. 

tnpsc-students TNPSC tnpsc-aspirants tnpsc-students-life-style

காதல்,கல்யாணம்,சம்பாத்தியம் என எதையும் கண்டுகொள்ளாம இன்னும் ஸ்கூல் பையன் மாதிரி பேக்கை தூக்கிட்டு டின்பிஎஸ்சி க்ளாஸ் போயிட்டு இருக்கிறோம்.. இரண்டு வருஷம் மட்டுமே படிச்சா கிடைக்கிற வேலை, இப்போ நாலு வருஷம் படிச்சாலும் கிடைப்பது சந்தேகம்.. என்ன காரணம்னு தெரியாம கனவை மட்டும் தூக்கிட்டு ஓடிட்டு இருந்தா, காசு கொடுத்து கரெக்ட் பண்ணி வேலை வாங்குது ஒரு கும்பல்.நம்ம கூட ஸ்கூல் படிச்சவன்லாம் செட்டில் ஆகிட்டான், நாம இன்னும் இப்படியே இருக்கிறோம்னு மனசு ஓரத்துல கவலைபட்டாலும் வர எக்ஸாம்ல போஸ்டிங் வாங்கிருவோம்னு தான் ஒவ்வொரு டிஎன்பிசி அஸ்பிரண்ட்டோட வாழ்க்கையும் நகருது. 

tnpsc-students TNPSC tnpsc-aspirants tnpsc-students-life-style

இருப்பினும் 90% ஊழல் அதிகாரிகள் போன்று எதிர்மறையான விஷயங்கள் இருந்தாலும் மீதி உள்ள 10% அதிகாரிகளால் தான் முறைகேடு செய்தவர்கள் வாழ்நாளில் டிஎன்பிசி பக்கமே வரமுடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி நேர்மறையான எதிர்பார்ப்புகளான மறுதரவரிசை, முறைகேடு செய்தவர்கள் தகுதி நீக்கம், உடனடியாக கலந்தாய்வு இவை போன்றவை நடந்துள்ளது. ஆக, டின்பிசி அஸ்ப்ரண்ட்ஸ் மனம் தளராது அடுத்த அடியை எடுத்து வைக்கும் நேரம் இது..