Out of Box

மதுரையில் கார் வாங்கிய கோடீஸ்வரன் பாண்டிச்சேரியில் பதிவு செய்ய காரணம் என்ன? பூரா பயலுகளும் பிராடு! இந்த இரகசியம் தெரிந்தால் நீங்களும் ஓடுவீங்க!

Oct 08 2020 06:18:00 PM

எல்லாமே! சும்மா கிடைக்குமா பாஸ்? என்கிற மாதிரியான மனநிலையில் நம்ம மக்கள் இருந்தால், நாடு எப்படி உருப்படும்? செய்வது எல்லாம் பிராடுத்தனம், பிறகு ஆட்சி சரியில்லை, ஆட்சியாளன் சரியில்லை என பழியை தூக்கி இன்னொருவர் மீது போட்டுவிட்டு, நைஸாக நகர்ந்துவிடுகிறோம். எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் மட்டுமே மூன்று பென்ஸ் கார், பாண்டிச்சேரி பதிவு எண்ணில் ஓடி பார்த்திருக்கிறேன். இத்தனைக்கும் கார் ஓனருக்கும் பாண்டிச்சேரிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தாலும், பாண்டிச்சேரி பதிவு எண்ணில் மட்டுமே இரண்டு கார் ஓடுது. 

car registration pondicherry py-registration

பிச்சைக்காரன் படத்தில் ஒரு சீன் வரும். ஆடி காரில் வருபவனை விஜய் ஆண்டனி முகத்தில் கரையைப்பூசி அனுப்பிவிடுவார். அதற்கு பிறகு தான் பாண்டிச்சேரி பதிவு எண்ணில் கார் வாங்கினால், பல இலட்சம் மிச்சமாகும் என்ற இரகசியமே தெரிந்தது. பாண்டிச்சேரியை பொறுத்தவரையில் வாகன வரி ரொம்ப ரொம்ப குறைவு. அது எந்த அளவுக்கு குறைவு என்பதை கேள்விப்பட்டால், அடபாவிங்களா! இவ்வளவு நாள் இதுக்காக தான் பாண்டிச்சேரி நோக்கி ஓடினீங்களா என கேட்கத்தூண்டும்.

car registration pondicherry py-registration

பொதுவாக ஒரு வாகனத்திற்கு விதிக்கப்படும் வரி, அந்த மாநிலத்தில் உள்ள சாலைகளின் நீளத்தை பொருத்து நிர்ணயம் செய்யப்படும். மாநிலத்தில் உள்ள சாலைகளை பயன்படுத்த நாம் கொடுக்கும் தொகை அது. அப்படிப்பார்த்தால், பாண்டிச்சேரி சாலைகள் ஏறக்குறைய 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் முடிந்துவிடும். அதுவே தமிழக சாலைகள் பல நூறு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பறந்து விரிந்து கிடக்கிறது. இந்த இடத்தில் தான் வரி வித்தியாசம் விளையாடுது.

car registration pondicherry py-registration

இன்னும் தெளிவாக புரிய வேண்டும் என்றால், ஒரு சொகுசு காரின் விலை 75 இலட்சம் என வைத்துக்கொள்வோம். அதற்கு தமிழக அரசுக்கு நீங்கள் 11 இலட்சம் வரியாக செலுத்த வேண்டும். இதுவே பாண்டிச்சேரி என்றால், 75 ஆயிரம் மட்டும் கட்டினால் போதுமாம். முன்பெல்லாம் புது கார் வாங்கியவுடன், பாண்டிச்சேரியை நோக்கி பெட்டி படுக்கையோடு ஏன் ஓடினாங்க என்ற இரகசியம், இப்போ தான் தெரியுது. பாண்டிச்சேரியில் தற்காலிக முகவரி வாங்கிவிட்டு இந்த மோசடி நடந்து கொண்டிருந்தது.

car registration pondicherry py-registration

இப்போது ரொம்ப இறுக்கி பிடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு வாகனத்தை பாண்டிச்சேரியில் பதிவு செய்ய வேண்டும் என்றால், அங்கு வசித்து வருவதற்கான சான்று இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி வந்த பிறகு அதற்கும் ஆப்பு வைக்கப்பட்டது. தமிழக சாலைகளை குண்டுங்குழியுமாக மாற்றிவிட்டு, பாண்டிச்சேரி சாலைக்கு வரி கட்டிய செல்வந்தர்களும், நடிகர்களும் இன்றைக்கு மூக்கால் அழுகாத குறையாக ஒப்பாரி வைக்கின்றனர்.  பல லட்சங்களில் வாகனம் வாங்கி, சில லட்சங்களை மிச்சம் செய்யப்பார்க்கும் அறிவாளிகள்.