Out of Box

என்றாவது பெரிய ஹோட்டல்களில் சமையல் செய்யும் வாசனை வந்து பார்த்திருக்கீங்களா? ஒரு வடை கூட ஒரிஜினல் கிடையாது! பெரும்பாலும் மக்கள் அறியாத உணவகங்களில் நடக்கும் தில்லுமுல்லு வேலை!

Jan 12 2022 01:18:00 PM

எனது நண்பனொருவனை வார இறுதி நாளன்று சாப்பிட ஹோட்டலுக்கு அழைத்தேன். விடாப்பிடியாக மறுத்துவிட்டான். அதற்கு அவன் சொன்ன காரணம், சிலநாட்கள் ஓர் உணவகத்தில் வேலை செய்ததாகவும், அங்கு அவர்கள் மேற்கொள்ளும் சில செயல்களை பார்த்த பின், ஹோட்டலில் சாப்பிடுவதை நிறுத்தி விட்டதாகவும் சொன்னான். ஆனாலும் அவன் சொன்ன ஒன்றை, இன்றளவும் என்னால் மறக்க முடியவில்லை. அது உணவுக்கு ஆர்டர் கொடுத்தபின் உணவு சமைப்பவர் குறைத்த நிலையில் உள்ள தீயின் அளவை பெரிதாக கூட்டுவாராம்.

hotel food food-taste

சிறிது நேரத்தின் பின் அடுப்பிலிருக்கும் பாத்திரம் சூடாகிவிட்டதா என உமிழ் நீரை துப்பி சத்தம்வருகின்றதா என பார்த்த பின்தான் சமையலை தொடருகின்றாராம். அவன் சொல்லும் போதே அருவருப்பா இருந்துச்சு. இருந்தபோதும் நான் தொடர்ந்து ஹோட்டலில் சாப்பிட வேண்டிய நிலை இருக்கு. தவிர்க்கமுடியவில்லை. எனக்கு தெரிந்தே சில ஹோட்டல்களில், மீந்து போன இட்டிலிகள் துண்டு துண்டு துண்டாக்கி, மறுபடியும் மாவுடன் சேர்த்து அரைத்து தான் புதிய இட்டிலி பூ போல சுட்டுக்கொண்டு வந்து தருகின்றனர். இது சாம்பிள் தான். எல்லாம் வெளியே சொன்னால், முக்கால்வாசி ஹோட்டல் காலியாயிரும்.

hotel food food-taste

என் தந்தை பலமுறை ஹோட்டல்கள் பற்றி கூறியிருக்கிறார். சாதத்துடன் சுண்ணாம்பு, ஆப்ப சோடா இதெல்லாம் கலக்கிறார்களாம். ஏனெனில், பசி எடுக்காமல், அதிக சாதம் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அன்லிமிடெட் சாப்பாடு போடும் கடைகளில் இந்த தில்லுமுல்லு அப்போதே நடந்திருக்கிறது. இதெல்லாம் விட, இப்போ பெரிய பெரிய ஹோட்டல்களில், உடனடியாக சமைத்து தரும் பதார்த்தங்களை தவிர, மீதி எல்லாம் அவர்கள் சமைப்பதே இல்லை. வெளியில் ஆர்டர் கொடுத்து, மொத்தமாக வாங்கிக்கொள்கின்றனர். 5 ரூபாய் கொடுத்து வாங்கப்படும் வடை, நம்முடைய டேபிளுக்கு வரும் போது, 20 ரூபாயாகிவிடும்.

hotel food food-taste

எங்கள் ஊரில் உப்புமா, பொங்கல், கேசரி உணவுகளை ஒரு பெண்கள் குழுவும், வடை, பஜ்ஜி, பகோடா செய்ய ஒரு குழுவும், சட்னி, சாம்பார்  வகைகள் இட்டிலி மற்றும் தோசை வகைகளுக்கு மாவுகள் தயார் செய்து ஒரு குழுவும் இருக்காங்க. இவங்க சமைப்பது பூராவும் பெரிய ஹோட்டலுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவர்கள் கொடுக்கும் 5 ரூபாய் எண்ணெய் பலகாரங்கள் 18 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. நான்கு ரூபாய் கொடுத்து இவர்களிடம் வாங்கப்படும் இட்லி, 21 ரூபாய் விற்பனையாகிறது. என்னைக்காவது பெரிய ஹோட்டல்களில் சமைக்கும் வாசனை வந்து பார்த்து இருக்கீங்களா? அதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்.