His & Her

உடலில் அந்த இடத்தில் மச்சம் இருந்தால், கோடி கோடியாய் செல்வம் கொட்டுமா? மூடநம்பிக்கையை உடைத்த ஜோசியரின் வாக்கு! பணத்தில் புரளும் பக்கத்துவீட்டு பையன்!

Apr 05 2021 05:47:00 PM

சில வருடங்களுக்கு முன்னர் வீட்டிற்கு ஜோசியம் பார்க்கும் வயதானவர் ஒருவர் வந்திருந்தார். முன்னரெல்லாம் வீடு வீடாக ஜோசியம் பார்த்துவிட்டு செல்லும் வழக்கம் இருக்கும். எங்களது குடும்பத்திற்கு ஜோசியம் பார்க்க ஜோசியர் வந்திருந்தார். அவர் வருகையில் பக்கத்து வீட்டு பையன் எங்களது வீட்டில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அவனது சட்டையை கழட்டி விளையாடி கொண்டிருக்கும் போது, அவனது முதுகில் மச்சம் உள்ளதை இந்த ஜோசியர் பார்த்து என்னிடம் 'இந்த பையன் நாம் எட்டிப்பார்க்கா உயரத்திற்கு வருவான். அவனது பரம்பரையே அவனால் உயரும்' என கூறினார். முதுகில் மட்டுமல்ல, மச்சமுள்ளவரின் கண்களுக்கு புலப்படாதவாறு உ டலில் மச்சம் எங்கு இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு போவார்களாம். 

moles healthy-mole

இந்த நிகழ்வு நடந்து 20 வருடங்கள் இருக்கும். அந்த பையனது பெற்றோரை சில தினங்களுக்கு முன்னர் தான் பார்த்தோம். பையன் சிறு வயதிலே ஆடிட்டிங் முடித்து, அந்த ஊரில் உள்ள டாக்டர். அரசியல்வாதிகள் போன்ற பெரிய பெரிய தலைகளின் கணக்கு வழக்குகளை பார்த்து கொள்கிறானாம். 

moles healthy-mole

ஜோசியர் எப்போதோ சொன்னதை அன்றைய தினம் அந்த அம்மாவிடம் கூறினோம். அவரும் நினைவு படுத்தி சிரித்தார். இது போன்ற சில நம்பிக்கைகளை நம்பாமல் இருக்க முடியவில்லை. முதுகில் மட்டுமல்ல, உ டலின் பின்புறம் கண்ணுக்கு எட்டாத வகையில் எங்கு மச்சம் இருந்தாலும் அது அதிர்ஷ்டம் தானாம். அன்று ஜோசியர் சொன்னதும் நமது முதுகிலும் ஏதாவது அதிர்ஷ்ட மச்சம் இருக்குமா என தேடி பார்த்தேன் ஒன்றும் புலப்படவில்லை. அத்ரிஷ்டத்திற்கு பதில் ஆண்டவர் உழைக்க போதுமான தெம்பை வைத்து அனுப்பிவிட்டார் போல!