HotPicks

மொபைல் போன் வேகமாக சார்ஜ் குறைந்து விடுகிறதா? நீங்களே உங்கள் மொபைல் போனின் சார்ஜ் பிரச்சனையை சரி செய்யும் வழிமுறைகள் !

Apr 07 2021 01:05:00 PM

இப்போது இருக்கும் இளைய தலைமுறைகள் செல்போன் பயன்படுத்துவதையே ஒரு வேலையாக கொண்டுள்ளனர். இளைஞர்கள் தான் செல்போன் பயன்படுத்துகிறீர்களா என்றால் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டி கூட ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்த பழகிவிட்டனர். முன்நாட்களில் நாம் பயன்படுத்திய செல்போன் ஒரு வாரம் கூட சார்ஜ் நிற்கும். ஆனால் இந்த ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிய பின்னர் அரை நாள் சார்ஜ் நிற்பதே பெரிய விஷயமாக உள்ளது.

anroid mobile battery solve

நாமே சில விஷயங்களில் போனில் மாற்றம் செய்வதன் மூலம் நம் போனின் சார்ஜை நீண்ட நேரம் நிற்கும் படி மாற்றலாம். முதலில் நம் போனில் பிரைட்னஸ் ஆப்சன் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும். பிரைட்னஸ் அதிகமாக வைத்தால் போன் சார்ஜ் குறைய வாய்ப்புகள் உள்ளது.

anroid mobile battery solve

நமது போனில் எப்போதும் லொகேஷன் ஆப்சன் ஆன் செய்துவைத்திருந்தாலும் சார்ஜ் குறைய வாய்ப்புகள் உள்ளது. எப்போது தேவையோ அந்த நேரத்தில் மட்டும் லொகேஷன் ஆன் செய்து கொள்ள வேண்டும்.

anroid mobile battery solve

நமது செல்போனில் வைக்கும் போட்டோ மற்றும் வால் பேப்பர் சிம்பிள் ஆக வைத்தால் சார்ஜ் குறைவது தடுக்கப்படும். அதே போல உங்கள் மொபைலில் தேவை இல்லாத செயலிகளை அழித்து விடுங்கள். நிறைய ஆன்லைன் ஆப் உபயோகப்படுத்தினால் போன் சார்ஜ் குறையும். அதே போல சில ஆப்கள் உங்கள் போனின் செயலை வேகப்படுத்தும் என்று சிலர் கூறுவார்கள். அந்த ஆப்களை கட்டாயம் உங்கள் மொபைலில் இருந்து இன்றே அழித்துவிடுங்கள்.

anroid mobile battery solve

போனை சார்ஜ் செய்துகொண்டே எப்போதும் உபயோகப்படுத்தாதீர்கள். அடிக்கடி மொபைல் போனை சார்ஜும் செய்யாதீர்கள். அடிக்கடி சார்ஜ் செய்யும் போது பேட்டரி செயலிழக்க வாய்ப்புள்ளது.

anroid mobile battery solve

புதிதாக மொபைல் போன் வாங்கும்போது பேட்டரி திறன் அதிகம் கொண்ட மொபைல்களை வாங்குவது நல்லது. அதே போன்று வேகமாக சார்ஜ் ஏறும் திறன் கொண்ட மொபைல்களை வாங்கினால் நீங்கள் சார்ஜ் செய்யும் நேரமும் குறையும், நீங்கள் நிறைய நேரம் போனை உபயோகப்படுத்தலாம்.

anroid mobile battery solve

நல்ல கம்பெனி மொபைல்களை வாங்கினால் உங்கள் மொபைல் போனுக்கு தேவையான உதிரிபாகங்களும் எளிதில் கிடைக்கும். விலை கம்மியான போனை வாங்கினால் உதிரிபாகங்கள் அதிக இடங்களில் கிடைக்காது என்பதும் பரவலாக சொல்லப்படும் செய்தி.

anroid mobile battery solve