HotPicks

உலக நாடுகளில் உள்ள மீனவர் முதல் ஆராய்ச்சியாளர்கள் வரை இன்றும் தேடப்படும் பொருள்! வி பத்தில் சிக்கியவர்களின் உ டல் கூட கிடைக்காத ம ர்மமான வி பத்து!

Aug 05 2021 10:26:00 AM

இதுவரை எத்தனையோ விமான வி பத்துகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் அதைப்பற்றிய தகவல்கள் எளிதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விமானம் எந்த இடத்தில் வி பத்துக்குள்ளானது? எத்தனை பேர் இ றந்துள்ளனர்? எப்படி வி பத்து நடந்தது? என பல தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளன. இதனை அறிய எத்தனையோ தொழிநுட்பங்களும் தேடுதல் குழுக்களும் உள்ளன. ஆனால் தேடுதல் நிபுணர்களுக்கே தலை சுற்றும் விதமாக அமைந்தது தான் இந்த மலேஷியா விமானத்தின் மறைவு. இதுவரை இந்த விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இது உண்மையில் வி பத்துக்குள்ளானதா? இல்லை மறைந்துவிட்டதா என கற்பனைகளுக்கு இடம் கொடுக்கும் விதமாக அமைந்தது தான் இந்த விமான வி பத்து.

m370-flight malasiya

2014ம் ஆண்டு, மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற விமான தான் இது. மொத்தம் 239பேர் (227 பயணிகள், 12 விமானிகள்) விமானம் பறக்க ஆரம்பித்த 38 நிமிடங்களில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் 1 மணிநேரத்துக்கு பின்னர் ஒரு ராணுவ ரேடாரில் தென்பட்டது. அப்போது அந்த விமானம் தென் சீனக்கடல் அருகே மலேசிய தீபகற்பம் மற்றும் அந்தமான் கடற்பகுதிகளுக்கு நடுவில் சென்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

m370-flight malasiya

பின்னர் இந்த விமானம் எங்கு சென்றது என தெரியவில்லை. எந்த ஒரு ரேடாரிலும் தென்படவும் இல்லை. இதனால் தேடுதல் வே ட்டை ஆரம்பித்தது. கிட்டத்தட்ட 46,00,000கி.மீ வரை இந்த விமானம் தேடப்பட்டது. 26 நாடுகளை சேர்ந்த 60 கப்பல்கள் மற்றும் 50 விமானங்கள் தேடுதல் பணியில் இறங்கின. அதுமட்டுமல்லாமல் அந்த வழியே செல்லும் சரக்கு கப்பல்கள், மீன் பிடிக்கும் மீனவர்கள், நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் செயற்கை கோள்கள் என அனைவரும் இந்த பணியில் இறங்கினர். இப்படி ஒரு தேடுதல் வே ட்டை உலகில் இதுவரை நிகழ்ந்ததில்லை. 

m370-flight malasiya

முதல் முயற்சியாக தாய்லாந்து வளைகுடாவில் தேடுதல் தொடங்கியது. பின்னர் மலாக்கா நீர்ச்சந்தி வரை தொடர்ந்தனர். பின்னர் இந்த விமானம் மலேசியா தீபகற்பத்தின் அருகில் இருந்திருக்கலாம் என தகவல் வெளியானது. இப்படி அந்த விமானத்தின் கடைசி சமிக்ஞை எங்கு தென்பட்டது என அறிந்து, அங்கிருந்து விமானம் எங்கெல்லாம் செல்ல வாய்ப்புள்ளது என்பதன் அடிப்படையிலும் தேட ஆரம்பித்தனர். பின்னர் செயற்கைகோள் உதவியுடனும் தேடுதல் நடந்தது. 

m370-flight malasiya

பின்னர் மார்ச் 16&26ம் தேதிகளில் இரண்டு பொருட்கள் கடலில் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை இந்த விமானத்தின் பாகங்கள் அல்ல என உறுதி செய்தனர். 2014ம் ஆண்டு மாயமான ஒரு விமானத்தின் தேடுதல் இன்றளவும் நடைபெற்று தான் வருகிறது. இதில் ஆச்சரியம் என்னவெனில் இந்த விமானம் என்ன ஆனது? ஏன் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை? என்ற கேள்விகளுக்கு இன்றும் பதில்கள் கிடைக்கவில்லை. சிலர் இந்த விமானம் காலப்பயணத்தில் சிக்கியிருக்கலாம் எனவும் கணிக்கின்றனர். அறிவியலை தாண்டி கற்பனைகளுக்கு இடம் கொடுத்த ஒரே ஆராய்ச்சி இந்த மலேசிய விமானம் குறித்த தேடுதல் தான்.