Misc

ரோட்டோரம் உள்ள இந்த மைல் கற்கள் ஏன் வித்தியாசமான நிறத்தில் உள்ளது தெரியுமா? கவர்மெண்ட் செய்யும் எல்லாவற்றிலும் ஒரு லாஜிக் உண்டு!

Oct 31 2020 11:38:00 PM

சாலையில் பயணிக்கும் போது பல மைல் கற்களை பார்த்திருப்போம். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதை பார்த்தது உண்டா? ஒரு சிலரே இதனை கவனித்திருப்பார்கள். இந்த கற்களில் பெரும்பாலும் நிறம், செல்லும் தொலைவு மற்றும் சேர வேண்டிய இடத்தை குறிப்பிட்டு இருப்பார்கள். இதில் இந்த நிறங்கள் எதனை குறிப்பிடுகிறது தெரியுமா? 

milestone colour-code

ட்ராவல்ஸ் வைத்து நடத்தும் சகோதரர் ஒருவர் அடிக்கடி இந்தியா முழுக்க சுற்றுவார். வட இந்தியா தென் இந்தியா என சுற்றிக்கொண்டே இருப்பார். அப்படி ட்ரிப் செல்லும் போது, சாலைகளில் வைக்கப்படும் மைல்கற்களின் நிறத்தை, தான் ஆரம்பத்தில் கவனிக்கவில்லை என்றும் போக போகத்தான் நிறவேறுபாடு உள்ளதை தெரிந்துகொண்டதாகவும் கூறினார். பின்னர் எதற்காக இந்த நிற வேறுபாடு என்பதையும் பகிந்துகொண்டார். 

milestone colour-code

மஞ்சள் மற்றும் வெள்ளை கலவை என்றால், தேசிய நெடுஞ்சாலை. 
கரும்பச்சை மற்றும் வெள்ளை கலவை என்றால், மாநில நெடுஞ்சாலை.
கருப்பு மற்றும் வெள்ளை கலவை என்றால், நகர மற்றும் மாவட்ட சாலை.
சிவப்பு மற்றும் வெள்ளை கலவை என்றால், பஞ்சாயத்து சாலை. 

milestone colour-code

படிக்க தெரியாதவர்களுக்கு, 'வேறொரு மாநிலத்தில் நுழைந்துவிட்டோம், தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறோம் வேகத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்' என்பதையெல்லாம் உணர்த்தவே இந்த நிற வேறுபாடுகளாம். ஆனால் அரசு இப்படி செய்யும் பல விஷயங்கள் மக்களை சென்றடைவதில்லை.