HotPicks

பெண்கள் ஓட்டும் சைக்கிளில் நடுவில் கம்பியை தூக்கியது ஏன் தெரியுமா? கால் தூக்கிப்போட வசதியா இல்ல! இது அதுக்கும் மேல

Dec 18 2020 03:34:00 PM

நடுவில் கம்பி இருந்தால், அது ஆண்கள் சைக்கிள், கிடைமட்ட கம்பியை தூக்கிவிட்டால், பெண்கள் சைக்கிள். இந்த மாதிரி ஒரு வடிவமைப்பை நம்ம ஊரில் மட்டுமே அதிகம் காண முடியும். பெரும்பாலும் கிராமப்புற மக்கள் கிடைமட்ட கம்பி வைத்த சைக்கிளை பெரிதும் விரும்புகின்றனர். காரணம் என்னவென்றால், பின்னால் கேரியரில் இரண்டு குடம் தண்ணீர் எடுக்கலாம். முன் பக்கம் கம்பி மீது ஒரு குடம் வைத்து எடுத்து வர முடியும். ஒரு கோணிப்பையை கம்பி மீது போட்டால், புல்லுக்கட்டை மேல் வைத்து எடுத்து வரலாம்.

cycle design pedal

குடும்பமாக வெளியில் போவதாக இருந்தால், கம்பி மீது ஒரு குழந்தையை உட்கார வைக்கலாம். நிறைய பழைய படங்களில், கம்பி வைத்த சைக்கிளில் ஹீரோ, ஹீரோயினை முன் பக்கம் வைத்துக்கொண்டு போவதை பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரி பாக்கியம் எல்லாம் கம்பி இல்லாத சைக்கிளில் கிடைக்குமா சொல்லுங்க. சைக்கிள் வடிவமைப்பில், ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக எதுவும் கிடையாது. உறுதி தன்மைக்கு ஏற்ப அவற்றின் வடிவமைப்பு மாறுபடுகிறது.

cycle design pedal

அதில் கம்பி வைத்ததை ஆண்களுக்கு என்றும், கிடைமட்ட கம்பி இல்லாததை பெண்களுக்கு என்றும் நாமாகவே மாற்றிக்கொண்டோம். கிடைமட்ட கம்பி இல்லாமல் இருப்பதால் எளிதாக கால்களை தூக்கிப்போட்டு பெண்களால் சைக்கிள் ஓட்ட முடிகிறது. தற்போது வரும் ஸ்கூட்டிகளின் வடிவமைப்பு கூட இதனை ஒத்தது தான். பெரும்பாலான பெண்களுக்கு  நின்றவாக்கில் ஏறி அமர மட்டுமே பிடிக்கிறது. அதற்கு ஏற்ப தற்போது வரும் வாகனங்களின் வடிவமைப்பும் மாற்றப்படுகிறது.

cycle design pedal

பெண்கள் சைக்கிளில் கீழ விழுந்தா கூட அ டி கம்மியா தான் படும். இந்த குறுக்கு கம்பி படுத்தற பாடு இருக்கே. சின்ன வயதாக இருக்கும் போது, மேட்டில் ஏறிய அழுத்தி பெடல் பண்ணிய நேரத்தில் பட்ட வே தனையை எல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கப்புன்னு காது அடைச்சிக்கும். பூமியே ஒருமுறை நின்று இயங்குவது போல இருக்கும். இந்த க ஷ்டத்தை எல்லாம் பெண் அனுபவிக்க கூடாதென்ற நல்லெண்ண அடிப்படையில், ஒரு ஆண் கண்டுபிடித்தது தான், கிடைமட்ட கம்பி இல்லாத சைக்கிள் டிஸைன்.