His & Her

அந்த ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை பிடித்துக் கொண்டு தொங்க வேண்டாமே! ஆடை அணிவதில் ஆண்கள் செய்யும் தவறு? ஆயிரம் கொடுத்தாலும் ஒரு காசுக்கு பிரயோஜனமில்ல!

Jul 20 2021 06:53:00 AM

எங்க ஹாஸ்டல் ரூம்மேட்ஸ் ஜீன்ஸ் பேண்ட் வைத்துக்கொண்டு செய்யும் அலப்பறை இருக்குமே. அய்யய்யோ..! தாங்க முடியலங்க. ஒருத்தன்கிட்ட இரண்டு ஜீன்ஸ் மட்டும் தான் இருக்கு. எப்போ பார்த்தாலும் ஜீன்ஸ் போட்டே தான் சுத்துவான், எந்த நேரத்தில் துவைக்கிறான்னே தெரியல. துவைக்காம போடுவதற்கு நல்லா வசதியா இருப்பதால், ஆளாளுக்கு ஜீன்ஸ் பக்கம் மாறிட்டாங்க. இன்னும் கொஞ்சநாள்ல பார்மல் பேண்ட் அப்படின்னா என்னான்னு கேட்கும் நிலை வந்தாலும் வரலாம்.

jean pant dress

சரி என்னமோ செஞ்சுட்டு போங்க. கொஞ்சம் ஆடை விஷயத்தில் புத்திசாலித்தனமா இருந்தால், நம்மமுடைய பர்சனாலிட்டியை கொஞ்சம் மாற்றிக் காண்பிக்கும். எந்த சட்டை போட்டாலும் ஜீன்ஸ் அணிந்தால் மேட்ச்சாகி விடும் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு சில பார்மல் சட்டைகளுக்கு பார்மல் பேண்ட் போட்டா மட்டும் தான் நல்லா இருக்கும். நானும் நிறைய பேரை கவனித்திருக்கிறேன். மேல இருந்து ஒரு லுக் விட்டா, கை பட்டன் எல்லாம் போட்டு, சட்டை மடிப்பு கலையாம பக்காவா இருப்பாங்க.

jean pant dress

கொஞ்சம் கீழே பார்த்தால், சம்பந்தமே இல்லாமல் ஜீன்ஸ் போட்டு இருப்பாங்க. பார்மல் ஆடை அணிந்தால் எவ்வளோ ஸ்மார்ட்டா இருக்க முடியுமென "பரத் என்னும் நான்" படத்தில் ஹீரோவுக்கு கொடுக்கப்பட்டதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். நிறைய பேர் என்கிட்டே இத சொல்லி இருக்காங்க. நானும் சோஷியல் மீடியாவில் எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு. அந்த மாதிரி அணிந்தால் நல்லா ரொம்பவே நல்லா இருக்கும். ஜீன்ஸ் ஒன்றை மட்டுமே கட்டிக்கொண்டு அழ வேண்டாம்.

jean pant dress

அடுத்து சிலர் ஜீன்ஸ் எடுக்கும் போது பெண்களுக்கானதை மாற்றி எடுப்பாங்க. அது பாதம் வரையில் லெக்கின்ஸ் மாதிரி கால்களை இறுக்கிப்பிடித்துக் கொண்டிருக்கும். அந்த தப்பை என்னைக்கும் செய்யாதீங்க. இருக்கின்ற கொஞ்ச நஞ்ச பர்சனாலிட்டியும் அதனால் போய்விடும். நார்மல் டைப் ஜீன்ஸ் எடுத்தாலும், கால் அளவு சரியா இருக்க மாதிரி எடுத்தா தான், பார்க்க எடுப்பா இருக்கும். ஆள் பாதி ஆடை பாதின்னு என்பதை, பல முறை நான் நிஜ வாழ்க்கையில் அனுபவப்பட்டதில் இதையெல்லாம் சொல்லறேன்.