Spellbound

#Surya: சூர்யா வேஸ்ட், அவருக்கெல்லாம் நடிக்கவே தெரியாது! கோலிவுட்டில் உள்ள மிகப்பெரிய மாஃபியா சிவகுமார் குடும்பம்! பெரிய இடத்தில் கைவைக்கும் பிரபலம்!

Aug 01 2020

இப்போதுதான் த்ரிஷாவை கழுவி ஊற்றினார் அடுத்து சூர்யாவா? சூர்யாவிற்கு நடிக்கவே தெரியாது.  ஏக்டிங்கிற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என ஒரு பிரபலம் வாய்க்கு வந்ததெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறார். யார் என கண்டுபிடித்து விட்டீர்களா? எந்த முன்னணி நட்சத்திரமாக இருந்தாலும் எதற்கும் அஞ்சாமல் அவர்கள் குறித்து அவதூறுகளை பேசி வருகிறார் சூப்பர் மாடல் மீரா. சில தினங்களுக்கு முன்னர் த்ரிஷா இப்போது சூர்யா. த்ரிஷா தன்னுடைய உடை பாணியை காப்பியடிப்பதாக கூறிக்கொண்டிருந்த மீராவின் அடுத்த டார்கெட் சூர்யா! 

meera-mithun surya

'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிகர் கலையரசனது மனைவியாக நடித்திருப்பார் மீரா மிதுன். கலையரசன் இறந்த காட்சியில் தான் ஒரே ஷாட்டில் தன்னுடைய சீனை முடித்தாகவும் இதனால் சுற்றி இருந்தவர்கள் தனது நடிப்பை பாராட்டி கைதட்டியதாகவும் ஆனால் சூர்யா அதிக நேரம் எடுத்துக்கொண்டு தன்னுடைய சீனை முடித்ததாகவும் தற்போது ஒரு காணொளியில் கூறியுள்ளார் மீரா. 

meera-mithun surya

இந்த படம் வெளியே வரும் முன்னரே ஊடகங்கள் மீரா குறித்து, 'சூப்பர் மாடல் மீரா இன் தானா சேர்ந்த கூட்டம், மீராவை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பார்க்க ஆவலாக உள்ள ரசிகர்கள்' என இப்படியெல்லாம் செய்தி வெளியிட்டதால் சூர்யா மீரா குறித்து, 'யார் இந்த பொண்ணு எதற்காக மீராவை பற்றி இவ்ளோ ப்ரோமோஷன் போய் கொண்டிருக்கிறது' என கேட்டதாகவும்' மீரா பெஸ்ட்டாக நடித்த அந்த சீன்களை எடுக்க சொல்லி படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு சூர்யா தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்ததாகவும் கூறியுள்ளார் மீரா.

meera-mithun surya

அதுமட்டுமின்றி படக்குழு தரப்பில், ஆடியோ லாஞ்சிற்கு மீரா வரக்கூடாது என கூறியதாகவும் மீரா ஏன் என காரணம் கேட்டால் அது கீர்த்திசுரேஷிற்கு சங்கடமான சூழலை விளைவிக்கும் என்பதனால் மீராவை வரவேண்டாம் என்றார்களாம். 

meera-mithun surya

மீரா சொல்வதை பார்த்தால் ஃபிலிம் இன்ஸ்டரியில் சூர்யாவுக்கு போட்டி மீரா போலவும் மீரா வளர்ந்து விடுவார் என்ற வயிற்றெரிச்சலில் சூர்யா இந்த வேலையை செய்தது போலவும் பேசியுள்ளார் மீரா. தான் சிறப்பாக நடித்த அந்த சீன் படத்தில் இல்லையென தெரிந்ததும் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் ஆனால் தான் நடித்த சில சீன்களே பெரும் ரசிகர் பாட்டாளத்தை கூட்டிவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் சிவகுமார் அவர்களின் குடும்பம் தான் கோலிவுட்டில் உள்ள மிகப்பெரிய மாஃபியா கும்பல் என கூறியுள்ளார் மீரா.

meera-mithun surya

படம் வந்த உடனே இதனை மீடியாவிடம் சொல்லாமல் ஏன் இப்போது இதனை கிளறுகிறார் என்றால் மீராவிடம் பதில் இல்லை. ஒரு பக்கம் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்தும் கார்த்தியின் உழவன்  அறக்கட்டளை குறித்தும் மீம்ஸ்களும் செய்திகளும் வைரலாகி கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஏன் இந்த விஷயத்தை மீரா உடைக்க வேண்டும் என்பது பெரிய கேள்வி. மீராவின் இந்த பேட்டிக்கு பின்னர் ரசிகர்களின் ரியாக்ஷ்ன் என்னவென்றால், 'நீ யாருனு எங்களுக்கு தெரியும், சூர்யா யாருனு உலகிற்கு தெரியும்' என எப்போதும் போல மீராவை கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டார்கள்.

meera-mithun surya

மீரா பிடிப்பதெல்லாம் பெரிய கொம்பு தான் முன்னர் த்ரிஷா இப்போது சூர்யா! மீராவின் இந்த பேட்டிக்கு பின்னாடி எல்லாம் யார் இருக்கிறார்கள் என சிபிஐ தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்து.