Misc

இதற்கு இது தான் அர்த்தமா? இவ்வளவு நாளா தெரியாமல் போனதே.மக்களுக்கேற்றவாறு மாறிப்போன பழமொழிகள்.

Mar 01 2021 10:00:00 AM

                     பொதுவாக நம் தமிழ் மொழியில் பல்லாயிரக்கணக்கான பழமொழிகள் இருக்கிறது. அதை நாம் அனைவரும் மேலோட்டமாக படித்து உணர்ந்த விதம் தவறாகவே இருக்கும். தவறாக புரிந்து கொள்வது மட்டும் அல்லாமல் பயன்படுத்தும்போதும் அதன் பொருள் மாறுபடும் வகையில் அப்பழமொழிகளை கூறுகிறோம். ஆனால் அதன் உண்மை பொருளை ஆராய்ந்தோமேயானால் மிகவும் ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருக்கும்

mamiyar-marumagal

        உதாரணமாக ," மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்" . இதை நாம் புரிந்து கொண்ட விதம், வீட்டில் மாமியார் ஒரு தவறை செய்தால் அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் , அதே தவறை அந்த வீட்டிற்கு வரும் மருமகள் செய்து விட்டால் அந்த மாமியார் அதை பெரிதுபடுத்தி விடுவார் . இவ்வாறு இதனுடைய அர்த்தத்தை  தவறாக  புரிந்துகொண்டு பயன்படுத்தி வருகின்றோம்.

mamiyar-marumagal

        ஆனால் இது அல்ல உண்மையான பழமொழி. உண்மை பழமொழி என்னவென்றால்,  "மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்". ஒரு விவசாயி வீட்டில், மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும் பொருளும் சேருமாம். இதுதான் இதனுடைய உண்மையான அர்த்தம். இனியாவது நாம் பழமொழிகளை சரியாகப் படித்து அதன் உண்மை பொருளை அறிவோம்