Misc

தமிழ் நாட்டில் மட்டும்தான் முருகரை வழிபடுவாங்களா? வடநாட்டில் முருகர் பெருமை சேர்க்கும் ஆலயம்!

Jul 21 2021 11:33:00 AM

தமிழ் கடவுள் என்றாலே அவர் நம்ம முருகப்பெருமான் மட்டுமே. நம்ம தமிழ் மக்களுக்கு ரொம்ப பிடித்த கடவுளும் முருகர் தான். இப்படி முருகரை போற்றும் நம் தமிழ் மக்களைப் போல வடமாநில மக்களும் முருகரை வணங்குவார்களா? என்று நாம் நினைத்திருப்போம். வடமாநில மக்கள் பக்தியில் தமிழர்களை மிஞ்சியவர்கள். அவங்களுக்கு எந்த கடவுளா இருந்தாலும் அந்த கடவுளை துதிப்பதில் ரொம்ப ஆர்வமாக இருப்பார்கள்.

malai mandir delhi

டெல்லியில் ஒரு புகழ் பெற்ற முருகன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலை மலை மந்திர் என்று அழைக்கிறார்கள். விமானத்தில் இருந்து இறங்கும்போது இந்த கோவில் அனைவரின் கண்களிலும் தென்படும் என்று சொல்கிறார்கள். 1965 ஆம் ஆண்டு தில்லி முதல்வர் பக்தவச்சலம் அவர்களால் இந்த கோவில் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்து இந்த கோவில் திறக்கப்பட்டது.

malai mandir delhi

கடந்த 100 ஆண்டுகளில் ஆகமவிதிப்படி முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்ட ஆலயம் இந்த மலை மந்திர் முருகன் ஆலயம் தான். தமிழ் கடவுள் முருகர் என்பதால் வெறும் தமிழர்கள் மட்டும் இந்த கோவிலில் சென்று வழிபடுவதில்லை. டில்லியில் உள்ள அனைத்து வடமாநில மக்களும் இந்த கோவிலில் சென்று வழிபடுகிறார்கள். குறிப்பாக சனி மற்றும் ஞாயிறுகளில் கூட்டம் நிரம்பி வழியும். எல்லா முருகன் ஆலயங்களைப் போலவே இந்த கோவிலும் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது.

malai mandir delhi

தமிழ்நாட்டில் முருகருக்காக கொண்டாடப்படும் அனைத்து விழாக்களும் இந்த ஆலயத்தில் கொண்டாடப்படுகின்றன. தைப்பூசம், வருடப் பிறப்பு, கந்தசஷ்டி போன்றவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றன. நாமும் டெல்லி செல்ல நேர்ந்தால் நம் முருகரை இந்த ஆலயத்துக்கு சென்று வழிபட்டு வரலாம்.

malai mandir delhi