Spellbound

மஹா படத்திற்கு சிம்புவால் எந்த பிரச்சனையும் இல்லையாம்! தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் நீதி மன்றத்துக்கு போன பஞ்சாயத்து!

May 15 2021 07:55:00 PM

சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான மஹா படம் நீண்ட நாட்களுக்கு முன்னர் தயாராகி இன்னும் வெளிவரவில்லை. இந்த படத்தின் தயாரிப்பாளர்  நேரடியாக OTT தளத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் OTT யில் வெளியிடக்கூடாது. திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும். இந்த படத்தில் சில காட்சிகள் இன்னும் எடுக்கவில்லை. எல்லாம் முடிந்த பின்னர் தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

simbu hansika maha movie

சிம்பு படம்னாலே எப்பவும் பஞ்சாயத்து தான். ஆனால் இந்த முறை பஞ்சாயத்துக்கு சிம்பு காரணம் இல்லையாம். சிம்பு சொன்ன தேதிகளில் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொடுத்துவிட்டாராம். தயாரிப்பாளர் எனக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று இயக்குனர் தரப்பிலிருந்து கு ற்றம் சாட்டப்படுகிறது. ஆனால் எல்லா பஞ்சாயத்துக்கும் காரணம் இயக்குனர் தானாம்.

simbu hansika maha movie

அவர் ஆரம்பத்தில் கதையை சொல்லி பாதி படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். பின்னர் தான் தெரிந்தது இது பழைய படத்தின் சாயல் என்று. பின்னர் மீண்டும் சில,பல மாற்றங்கள் செய்து மறுபடியும் முதலில் இருந்து படத்தை எடுக்க ஆரம்பித்தாராம். இதனால் படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு நிறைய ந ஷ்டம் ஏற்பட்டதாம்.

simbu hansika maha movie

என்ன ஆனாலும் பரவாயில்லை, ந ஷ்டம் என்பது முடிவாகி விட்டது, குறைந்த பட்சம் OTT யில் ரிலீஸ் செய்தால் கொஞ்சமாவது லாபம் பார்க்கலாம் என்று OTTயில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவெடுத்துவிட்டாராம். நடிகர் சிம்பு தான் இந்த பஞ்சாயத்தில் புகுந்து இருவருக்கும் சமரசம் பேசினால் மட்டுமே படம் சம்மந்தமான பிரச்சனையை முடிவுக்கு வரும் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசிக்கொள்கிறார்கள்.

simbu hansika maha movie