Around me

"கைலாஸா ஆசிரமத்தில் உள்ள அழகான பெண்களை எங்களுக்குத் திருமணமும்,அரசாங்க வேலை கொடுங்கள்" என்று நித்யானதாவுக்கு கடிதம் எழுதிய 90ஸ் கிட்ஸ்!!

Sep 16 2020 12:21:00 PM

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருப்பவர் நித்யானந்தா. தற்போது அவர் எங்கு உள்ளார் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக உள்ள நிலையில் சில மாதங்கள் முன்பு அவரே ஒரு விடியோவை பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.

nithyanandha 90's-kid-letter

அந்த வீடியோவில் நித்யானந்தா, தான் தனியாக ஒரு நாடு துவங்கியுள்ளதாகவும், அந்த நாட்டின் பெயர் கைலசா என்றும், அந்த நாட்டிற்கு தனியாக வாங்கி மற்றும் நாணயங்கள் இருப்பதாகவும், அது கைலாச நாணயங்கள் என்று அழைக்கப்படும் என்றும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட்டார்.

nithyanandha 90's-kid-letter

பின் ஒரு நாள் தனது கைலாசா நாட்டில் ஹோட்டல் கட்ட மதுரையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஒருவர் அவருக்கு கடிதம் எழுதியிருந்ததாகவும் அதற்கு நித்யானந்தா தனது கைலாசா நாட்டில் வணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செயல்பாடுகளில் மதுரை, காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். பின் கைலாசா பாஸ்போர்ட் என்றும் வரிசையாக அடுக்குகிறார்.

nithyanandha 90's-kid-letter

இதனையடுத்து தற்போது நித்யானந்தாவே சும்மா இருந்தாலும் நம்ம ஆளுங்க சும்மா இல்லாம அவருக்கு தற்பொழுது ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதற்கு அவர் பதில் அளிப்பாரா தெரியவில்லை.

nithyanandha 90's-kid-letter

மேலும் அந்த கடிதத்தில் திருமணம் ஆகாமல் தவித்துவரும் எங்களை போன்ற இளைஞர்களுக்கு கைலாசா நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்துவைக்குமாறு 90ஸ் கிட்ஸ்கள் சிலர்  நித்தியானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர், தற்போது அந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nithyanandha 90's-kid-letter

யார் சமூக வலைத்தளங்களில் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினாலும் அவர்களுக்கு பதில் அளிப்பதுண்டு. இதனையடுத்து, பல்வேறு ஆண்டுகளாகத் திருமணம் ஆகாத 90ஸ் கிட்ஸ்கள் நித்யானந்தாவுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

nithyanandha 90's-kid-letter

அந்த கடிதத்தில் "திருமண வேண்டுகோள்" என்று தலைப்பு வைத்து, பின்  “சுவாமி 1990 - ம் ஆண்டுகளில் பிறந்த நாங்கள் பல ஆண்டுகளாகத் திருமணம் ஆகாமல் தவித்து வருகிறோம். எங்களுக்குப் பிறகு 2000ஆம்  ஆண்டு பிறந்தவர்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம். தயவுசெய்து, தங்கள் ஆசிரமத்தில் உள்ள அழகான பெண்களை எங்களுக்குத் திருமணம் செய்து கொடுத்து கைலாசா நாட்டில் குடியுரிமையுடன், அரசாங்க வேலை கொடுத்து எங்கள் மனக்கவலையைத் தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்என்று எழுதியுள்ளனர்.

nithyanandha 90's-kid-letter

90ஸ் கிட்ஸ்கள் எழுதிய அந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தக் கடிதத்துக்குச் சாதகமான பதிலை நித்யானந்தா அளிப்பார் என்றும் 90ஸ் கிட்ஸ்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர். இந்த 90ஸ் கிட்ஸ்களின் குறையை தீர்ப்பாரா நித்யானந்தா?? பொறுத்திருந்து பார்ப்போம்.