His & Her

#TheniDistrictPolice: காவல்துறையின் சமயோஜன புத்தி! விஸ்வாசம் படத்தில் இப்படியொரு காட்சியை மறக்கவே மாட்டீங்க!

Feb 14 2020

தேனி மாவட்ட காவல்துறை எப்படியொரு கைதட்ட வேண்டிய செயலை செஞ்சுருக்காங்க. ஆனா நம்ம பயலுவ ட்விட்டர்ல சண்டைய விரட்டிட்டு இருக்காங்க. 'ஏன்யா! இவரோட டெம்ப்ளேட் யூஸ் பண்ணிருக்கிறீங்கனு'  ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கு.  இன்னொரு கோஷ்டியோ  'ஆஹா! தலய வச்சு என்ன செஞ்சாலும் மாஸ்தான்னு' புகழாரம் பாட கிளம்பியாச்சு. சொன்ன விஷயம் ரீச்சா இல்லையா? போலீஸ் பெண்களை பாதுகாக்க எப்படியெல்லாம் ஸ்டெப் எடுக்குறாங்க, தொழில்நுட்பத்தை வித்தியாசமாக கையாளும் வேறு ஏதாவது முறைகள் இருக்கா? என  இதை பற்றியெல்லாம் யோசிக்க எந்த ஒரு கோஷ்டியும் இல்லையே? நல்ல விஷயத்தை சொன்னா கூட மீம்ஸ் போட்டாத்தான் ரீச் ஆகுது.

viswasam

செய்தி போல சொல்லிருந்தால் இந்த தகவல் மக்களை சென்றடைவதற்குள் , ஆப்பே அவுட் டேட் ஆயிடும்னு சரியாக புரிந்து வைத்து கொண்டு தங்களது சமயோஜன புத்தியை பயன்படுத்திய காவல்துறைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது