Misc

எதற்கும் கரையாத தொப்பை இதற்கு கரைந்து விட்டதா? கொடி போல் இடை மாறும் வைத்தியம்.

Mar 01 2021 10:28:00 AM

நம்முடைய உடலில் பல இடங்களில் தங்கி, நமது தோற்றத்தை பருமனாக  காட்டக்கூடிய அளவுக்கு மாற்றிவிடுகிறது இந்த கொழுப்புகள். முக்கியமாக, கை , வயிறு இடுப்புப்பகுதி, தொடைப்பகுதி போன்ற இடங்களில் தங்கி நம் உடல் அழகையே கெடுத்து நம்மை மன உளைச்சலுக்கு ஆட்படுத்தி விடுகின்றது.

karpooravalli-leaf

இந்த சூழ்நிலையில் நமக்கு பிடித்த உணவுகள், ஆடைகள்  எல்லாத்தையும் தவிர்க்க வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளக்கூடிய இந்த உடல் பருமனை குறைக்க ஒரு அற்புதமான தீர்வு உண்டு.

karpooravalli-leaf

ஓமவல்லி என்று அழைக்கக்கூடிய கற்பூரவல்லி இலைகளில் என்சைம் ,வேதிப்பொருளை அதிக அளவில் கொண்டிருக்கிறது. இது சளி ,இருமல்  போன்ற  தொந்தரவு மட்டுமில்லாமல் உடல் எடை ,தொப்பையைக் குறைக்கவும் பயன்படுகிறது. இதில் உள்ள காரத்தன்மை நமது உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து வெளியேற்றுகிறது.

       

karpooravalli-leaf

ஏழு கற்பூரவல்லி இலைகளை  பொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி ,1 டீஸ்பூன் அளவு  புதினாப்பொடி,5 டீ ஸ்பூன் அளவு தயிர்,அனைத்தையும் நன்கு அரைத்து 1 டம்ளர் அளவு எடுத்து கொண்டு அதனுடன் 1/2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு , 1/2 டீஸ்பூன் அளவு தேன் விட்டு நன்கு கலந்து தினமும் ஒரு வேளை பருகி வந்தால் நம் உடலிலுள்ள கொழுப்புகள் கரைந்து தொப்பை குறைந்து உடல் கொடி போல் மாறும்.