Misc

இறைவனுக்காக நாம் படைக்கும் பொருள்களில் முழுமையாக இறைவனை சென்றடைவது கற்பூரம் மட்டுமே! அத்தனை சிறப்பு மிக்க கற்பூர ஆராதனையை எப்படி காட்ட வேண்டும் என தெரியுமா?

Jan 12 2022 07:47:00 PM

இறைவனுக்காக நாம் படைக்கும் எல்லாப் பொருள்களும் இறைவனை முழுமையாக சென்றடைவதில்லை. அதாவது இறைவனுக்கு படைத்து விட்டு அதன் பின்பு நாம் தான் அதை பயன்படுத்திக் கொள்கிறோம்.

பிரசாதமாக இருந்தாலும் சரி வெற்றிலை, பாக்கு, பழம் என எதுவாக இருந்தாலும் சரி ஊதுபத்தி கூட சாம்பல் மிச்சம் இருக்கிறது. ஆனால் கற்பூரம் மட்டுமே அக்னியில் கரைந்து முழுமையாக இறைவனை சென்றடைகின்றது.

karpooram deepam

இப்படி இருக்கும் நிலையில் இந்த கற்பூர ஆராதனை நாம் முறைப்படி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். கற்பூர ஆராதனை வீட்டில் முறைப்படி செய்தால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும், தரித்திரம் அனைத்தும் நீங்கும்.

சிலரது வீட்டில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கற்பூர ஆராதனை இறைவனுக்காக காண்பிப்பார்கள். சில வீடுகளில் தினந்தோறும் கூட கற்பூரத்தை காட்டும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். எப்படி இருந்தாலும் முதலில் வீட்டு பூஜையில் கற்பூர தீபத்தை ஏற்ற வேண்டும். அதன் பின்னர் பூஜை அறைக்குள் இருக்கும் இறைவனின் திருவுருவப் படத்திற்கு ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

karpooram deepam

அதன் பின்னர் வீட்டில் எத்தனை அறைகள் உள்ளதோ அவை அனைத்திற்கும் கற்பூர தீபத்தை காண்பிப்பக்க வேண்டும். இறுதியாக வீட்டு நிலை வாசற் படிக்கு வெளியில் சென்று வீட்டினுள்  பார்த்தவாறு உங்கள் வாசற்படிக்கு மூன்று முறை கற்பூர ஆரத்தி காட்டி சூரிய பகவானுக்கும் மூன்று முறை காட்ட வேண்டும். அதன் பின்னர் வீட்டிற்கு வந்து பூஜையறையில் திரும்பவும் மூன்று முறை ஆரத்தி காட்டி தீப ஆராதனையை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

karpooram deepam

இறுதியாக எந்த இடத்தில் எல்லாம் தீபாராதனை காட்டி வந்தீர்களோ அந்த இடங்களில் தீர்த்தமிட வேண்டும். இது தான் சரியான முறை. இவ்வாறாக வீட்டில் கற்பூர ஆரத்தி காட்டி வருவதன் மூலம் வீட்டில் எந்த இடத்திலும் கெட்ட சக்தி தங்காது என்பது குறிப்பிடத்தக்கது.