Misc

கர்ணன் படத்தில் காட்டப்படும் இந்த பொம்மைக்கான குறியீடு என்ன தெரியுமா? குறியீடே தெரியாமல் படம் பார்த்தவர்கள் பொம்மைக்கான குறியீட்டை தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்.

Apr 14 2021 01:25:00 PM

கர்ணன் படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்த தனுஷ், லால், யோகிபாபு படத்தின் இயக்குனர் மாறி செல்வராஜ் என அனைவரையும் ரசிகர்கள் பாராட்டிவருகிறார்கள். இந்த படத்தில் நிறைய குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. சில குறியீடுகள் மட்டுமே ரசிகர்களால் எளிதில் யூகிக்கும்படி இருந்தது. குறிப்பாக படத்தில் நிறைய இடங்களில் ஒரு குட்டி பெண் தலையாட்டி பொம்மையுடன் தோன்றிக்கொண்டே இருக்கும்.

dhanush bommai karnan movie fact real

படத்தை பார்க்கும் அனைவரும் அது தனுஷின் தங்கை இ றந்த பிறகு பொம்மை போல தோன்றுகிறார் என்று நினைப்பார்கள். உண்மையான காரணம் அது கிடையாது. நம் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக ஒரு வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பெண் குழந்தை திருமணம் நடப்பதற்கு முன்னாள் கன்னிப்பெண்ணாக இருக்கும்போது இ றக்கும் தருவாயில் அந்த பெண்ணை கன்னி தெய்வமாக அந்த வீட்டில் உள்ளவர்கள் வணங்குவார்கள்.

dhanush bommai karnan movie fact real

ஆண்டுதோறும் அந்த பெண் இ றந்த நாளிலோ அல்லது தை மாதத்தின் போதோ அந்த கன்னிப்பெண்ணை தெய்வமாக வைத்து வழிபடுவதை தமிழக மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இன்னமும் இந்த பழக்கம் நம் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. கன்னி தெய்வத்தை தொடர்ந்து வணங்கி வருவதால் நம் குடும்பத்தில் உள்ள க ஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

dhanush bommai karnan movie fact real

இந்த பழக்கவழக்க முறையை மக்கள் நிறைய பேர் மறந்துவிட்டார்கள். அதை தன் படத்தின் மூலம் மக்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றே மாரி செல்வராஜ் அந்த பொம்மை போன்ற உருவத்தை படத்தில் அடிக்கடி தோன்ற வைத்துள்ளார் என்பதுதான் உண்மை.

dhanush bommai karnan movie fact real