Out of Box

காசு கொடுத்தாக்கூட கிடைக்காதா? இந்த நாயை வாங்கிவிட்டால் நீங்க பெரிய ஆள்! தூத்துக்குடி, திருநெல்வேலி மக்களுக்கு மட்டுமே உண்மை என்னான்னு புரியும்!

Oct 16 2021 09:59:00 PM

தூத்துக்குடி, திருநெல்வேலி பக்கம் இந்த நாயை காசு கொடுத்து வாங்க முடியாது. அதற்கு நீங்கள் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய ஆட்கள் சிபாரிசு செய்தாலும், மாற்று சமூக மக்களுக்கு தர மாட்டாங்க. இந்த ஜாதியினர் மனிதர்களுடன் நல்லா ஆசா பாசமா இருப்பாங்க. இந்த நாயை மட்டும் எவருக்கும் வீட்டுக் கொடுக்க மாட்டாங்க. அவங்க ஜாதியின் பெருமையாக இதனைப்பார்க்கின்றனர். இது ஜாதி வெறி கோணத்தில் பார்க்கப்பட வேண்டிய ஒன்று அல்ல. நாயுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும்.

kanni-dog dog country-dog

இந்த நாய் இனத்தை கன்னி நாய் என அழைக்கின்றனர். ஒரு கன்னிப் பெண் திருமணம் முடிந்து வீட்டை விட்டுச் செல்லும் போது சீதனமாக இந்த நாய் கொடுக்கபட்டதாலேயே இதன் பெயர் கன்னி ஆனது என்று எங்கோ படித்த ஞாபகம். அதன் உடல் வாகு வேகமாக ஓடுவதற்கு ஏற்ற வகையில் இருக்கும். இது ஒரு வேட்டை நாய் கூட. அரேபியாவில் நாய்களுக்கு ஓட்டப் பந்தயம் நடக்கும். அதில் சீறிப்பாயும் நாய்கள் இதே கன்னி அல்லது சிப்பிப்பாறை நாய்கள் தான். முயல் வேட்டையில் அந்த நாயை மிஞ்ச முடியாது. ஒரே நேரத்தில் ஒருவர் கையில் 5 நாய்களை கயிறு கட்டி அழைத்து செல்வார்கள்.

kanni-dog dog country-dog

அவர்கள் பின்னால் அனுபவ சாலி நாய்கள் அஞ்சாறு எண்ணம் பின்னாடி ஓடி வரும். இரவு சென்று மறுநாள் காலை கம்பில் 10 முயல்களை கட்டி தொங்க விட்டு கொண்டு வருவார்கள். முயல் வேட்டை தடை இருப்பதால் தற்போது மிகவும் குறைந்துவிட்டது. அந்த ரக நாய்கள் வீட்டில் உள்ள பழைய சோற்றை தின்று விட்டு விஸ்வாசமாக இருக்கும்.  தூத்துக்குடி, திருநெல்வேலியில் குறிப்பிட்ட சாதியினர் கிராமங்களில் சாதாரணமாக காணலாம். இது உண்மையான தகவலான்னு தெரியல. கொடுமை என்னவெனில் இந்த வகை  நாயின் பெண் நாய், வேறு இன வகையுடன் இனப்பெருக்கம் செய்வதையும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

kanni-dog dog country-dog

மேலும் இந்த வகை நாய், வேறு இன வகை நாயுடன் இனப்பெருக்கத்திற்கான பு ணர்தல் நடை பெற்றது என்று தெரிய வந்தால், இந்த இன வகை நாய்களை எவரும் அறியாத வண்ணம் கொன்று விடுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கின்றேன். இதே போல "புல்லி குட்டா" என்ற வகை நாய்களும் பஞ்சாப் மாகாணங்களிள் கவுரவத்திற்காக வளர்க்கப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன். முன்பு இருந்த பழக்கம் இப்பொழுது குறைந்து வருவது போலத்தெரிகிறது. கன்னி நாய் ரகத்தினை வாட்ஸ்ஆப் மூலமாக விற்பனை செய்யும் அதே பகுதியை சேர்ந்த, அதே சமூகத்தை சேர்ந்தவர்களும் இருக்கின்றனர்.