HotPicks

காட்டிலேயே பிறந்து விலங்குகளுடன் மட்டும் வாழ்ந்த மனிதர்கள் இருக்கிறார்களா? இந்த விஷயம் உண்மையில் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்!

Jun 20 2021 09:42:00 PM

ஜங்கிள் புக் திரைப்படம் நம்ம எல்லாரும் பார்த்திருப்போம். அந்த படத்தை பார்க்கும் போது இந்த மாதிரி விஷயம் எல்லாம் சாத்தியமா? இதெல்லாம் கட்டுக்கதை என்ற எண்ணம் தோன்றும். உண்மையில் விலங்குகளுடன் மனிதர்கள் வாழமுடியுமா? என்றல்லாம் அந்த படம் நம்மை சிந்திக்க வைக்கும். ஆனால் இந்த ஜங்கிள் புக் திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு விஷயத்தை அடிப்படையாக வைத்து தான் எடுக்கப்பட்டது.

jungle book real incident

1867ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசம் புலந்த்ஷார் மாவட்டத்தில் ஒரு அடர்ந்த காட்டில் வேட்டைக்கு ஒரு குழுவினர் சென்றிருந்தனர். அப்போது அங்கே ஒரு ஓநாய் கூட்டம் அவர்களை கடந்து சென்றது. அந்த ஓநாய் கூட்டத்தில் உள்ள ஒரு உயிரினம் மட்டும் வித்யாசமாக இருந்தது. என்னடா புதுசா ஒரு உயிரினம் செல்கிறதே என்று அந்த ஓநாய்களின் கால்தடங்களை பின்தொடர்ந்து சென்றனர். கடைசியில் அந்த ஓநாய்களின் குகைக்கு சென்றனர்.

jungle book real incident

உடனே அந்த ஓநாய்களின் குகைக்கு தீ வைத்து அங்குள்ள ஓநாய்களை விரட்டினர். பின்னர் அந்த குகைக்குள் இருந்து ஒரு 6 வயது சிறுவன் ஒநாயைப்போல 4 கால்களில் நடந்து வந்தான். அவன் சிறு வயது முதலே இந்த ஓநாய்களுடன் வளர்ந்ததால் அவனால் மனிதர்களைப்போல நடக்க முடியவில்லை. பேசவும் முடியவில்லை. உடனே அந்த குழந்தையை ஆக்ராவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சேர்த்தனர்.

jungle book real incident

அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்த சிறுவனை மனிதர்களை போல மாற்ற முடியவில்லை. ஒரு வழியாக மனிதர்களைப் போல இரண்டு கால்களில் நடக்க கற்றுக்கொடுத்தனர். நம்முடைய உணவுகளை அந்த பையனுக்கு கொடுத்தாலும் அவன் காட்டிலே வாழ்ந்து பழகியதால் பச்சையான கறியையே சாப்பிட விரும்பினான்.

jungle book real incident

அவன் சனிக்கிழமை அன்று அந்த ஆசிரமத்துக்கு வந்ததால் தினா சனிச்சார் என்று அவனுக்கு பெயர் வைத்தார்கள். மனிதர்களிடம் இருந்து அந்த பையன் கற்றுக்கொண்ட ஒரே விஷயம் புகை பிடிப்பது தான். அந்த பையன் தொடர்ந்து புகை பிடித்துக்கொண்டே இருந்ததால் தனது 35 வது வயதில் உ யிரிழந்தார். இந்த உண்மை கதையை வைத்துதான் ஜங்கிள் புக் கதையை ருட்யார்ட் கிப்ளிங் எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த சிறுவனைப்போல உலகம் முழுவதும் நிறைய மனிதர்கள் விலங்குகளால் வளர்க்கப்பட்டார்கள் என்றும் சொல்கிறார்கள்.

jungle book real incident