Spellbound

அருமையான நடிகர், தனுஷ், விஜய் சேதுபதி போல மாறி இருக்கவேண்டிய நபர் இப்போது பட வாய்ப்பு கிடைக்காமல் தத்தளிப்பது ஏன்?

Aug 09 2021 01:41:00 PM

தமிழ் சினிமாவில் சில நடிகர்களின் நடிப்பை பார்க்கும்போது இவர் இந்த கதாப்பாத்திரமாகவே மாறிவிடுகிறாரே என்று நாம் யோசிப்போம். ஆனால் அந்த மாதிரியான திறமை உள்ள சில நடிகர்கள் தான் வாய்ப்பு கிடைக்காமல் சுற்றுவார்கள். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மகன் ஜீவா. இவர் ஆரம்ப காலகட்டத்தில் தனது தந்தை தயாரிப்பில் சில படங்களில் நடித்துவந்தார். அந்த படங்களிலும் அளவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

jeeva acting skills tamil movie

பின்னர் இவர் நடிப்பில் வெளியான ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற படங்கள் நடிப்பில் இவர் கமலஹாசனையே மிஞ்சிவிடுவார் என்ற அளவிற்கு பேசப்பட்டன. இந்த படங்களில் நம்மால் நடிகர் ஜீவாவைத் தவிர வேறு எந்த நடிகரையும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். எப்படியும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருவார் என்று எதிர்பார்த்த போது தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்.

jeeva acting skills tamil movie

இவர் சிறப்பாக நடித்த ராம், ஈ, கற்றது தமிழ் போன்ற படங்கள் விமர்சன ரீதியாகவும், நடிப்பு ரீதியாகவும் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. சிவா மனசுல சக்தி, சிங்கம் புலி, நண்பன் போன்ற கமெர்ஷியல் படங்கள் தான் இவருக்கு அதிக அளவில் கைகொடுத்தன. ஒரு பேட்டியில் இவரே ஓப்பனாக சொல்லிவிட்டார். நான் சிறப்பாக நடித்த படங்களை யாரும் விரும்பி பார்க்கவில்லை. கமெர்சியல் படங்கள் தான் எல்லோரும் விரும்பி பாக்குறாங்க, அதனால எனக்கும் வேற வழி இல்ல, இனி நான் கமெர்ஷியல் படங்கள் தான் நடிக்கணும் போல என்று புலம்பி விட்டார்.

jeeva acting skills tamil movie

முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், யான் போன்ற முன்னணி இயக்குனர்கள் இயக்கிய படங்களே ஜீவா நடிப்பில் வெற்றி பெறவில்லை. இயக்குனர்கள் கதையில் சொதப்பியதற்கு நம்ம ஜீவா என்ன பண்ண முடியும். நல்ல நடிப்பு திறமை இருந்தும் இயக்குனர்களின் தவறால் இவருடைய படங்கள் வெற்றி பெறுவதில்லை. இனியாவது தன்னுடைய சிறப்பான நடிப்பின் மூலம் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் ஒன்னு மட்டும் உறுதி, இவரின் நடிப்புக்கு தீனி போடும் கதை மட்டும் அமைந்துவிட்டால் தனுஷ், விஜய் சேதுபதியை எல்லாம் ஒரே வருடத்தில் இவர் ஓரம் கட்டிவிடுவார்.

jeeva acting skills tamil movie