HotPicks

#jbl: சமீபத்தில் நான் வாங்கிய என்னை கவர்ந்த அற்புதமான படைப்பு!

Feb 12 2020

உங்க அறையில் டிவி பார்க்கும்போது சரியான அளவிலான வால்யூம் வைத்திருப்பீர்கள். வேறு அறைக்கு போகும் போது உதாரணத்திற்கு கிச்சன் செல்கிறோம் என்றால் வேலை செய்துகொண்டே சீரியல் வசனங்களை கேட்க வால்யூம் இன்கிரீஸ் செய்து கொள்வோம். இந்த சத்தம் அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவாக அமையலாம். அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் ப்ளூடூத் ஸ்பீக்கர்.

தற்போது உள்ள தொலைக்காட்சிகளில் ஆடியோ அவுட்புட்பெரும்பாலும் ஆப்டிக்(TOSLINK) மட்டுமே. பழைய டிவிக்களில் AV cable மூன்று நிற பின்களுடன் வரும்.  எப்படியானாலும் இந்த சிக்னலை ப்ளூடூத் வழியே ஒலிபரப்ப முடியாது .இதற்கு இடைப்பட்ட சாதனம் கிடைக்கின்றது. இது டிவியின் ஆடியோவை ஆப்டிக்  ஒளியாகி  உள்வாங்கி , ப்ளூடூத் அலைகளாக மாற்றி தரும். 

பெரிய பெரிய ஸ்பீகரை எல்லாம் ஓரம்கட்டிவிட்டது புதிதாக வாங்கிய ப்ளூடூத் ஸ்பீக்கர். மிகவும் சிறியது என்பதால் எங்கு சென்றாலும் கையோடு எடுத்துக் கொண்டு செல்லலாம். வியக்கத்தக்க மிகப் பெரிய சவுண்டில் வீட்டை அதிர வைக்கலாம்.பாட்டு கேட்பதில் அதிக ஆர்வம் கொண்டுவர்களுக்கு கண்டிப்பாக இது  ரொம்பவே பிடிக்கும். இதனை கிச்சனில்  மாட்டிக் கொண்டு,  டிவி சீரியல் டயலாக்குகளை கேட்டுக் கொண்டு  அவ்வப்போது வந்து படத்தை எட்டிப் பார்த்துக் கொண்டு  சமைப்பது  இப்போது வழக்கமாகி விட்டது.

சரியாக 10 மணி நேரம் சார்ஜ்  தாக்குபிடிக்கிறது. பயன்படுத்துவதும் சுலபம்.. இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால்,  எதிரொலியை ரத்து செய்யும் ஸ்பீக்கர் என்பதால் தெளிவாக ஒலி கேட்கிறது. பக்கத்தில் இருப்பவருக்கு தொந்தரவு இல்லாமல் இரவு நேரங்களில் நமக்கு அருகில் குறைவான ஒலியில் கேட்க மிகவும் வசதியாகவும் இருக்கும். 

Top