HotPicks

மாடு மாதிரி தின்றாலும் மெலிந்தே இருக்கிறார்களே ஜப்பானியர்கள் எப்படி? விருந்துக்கு போனா வெற்றிலைபாக்கு போட வேண்டுமென சும்மாவா சொன்னார்கள்?

May 16 2021 01:30:00 PM

ஊர்வது, மிதப்பது, பறப்பது என எதை தின்றாலும் இந்த ஜப்பானியர்கள் மட்டும் இவ்வளவு ஆரோக்கியமாக உள்ளார்களே எப்படி? நாம் அரிசி சோற்றை உண்பது போல்தானே அவர்களும் நூடுல்ஸ்ஸை மூன்றுவேளையும் உண்கிறார்கள். இருப்பினும் அங்குள்ள பெரும்பாலான மக்கள் மெலிந்தே உள்ளார்களே எப்படி? 

japanese-lifestyle Japanese-Cuisine

அங்குள்ளவர்கள் தங்களது பாரம்பரிய உணவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து உண்கிறார்கள். அதோடு, அவர்கள் நம்மை போல மேல்நாட்டு மோ கத்தில், கார்ப்பரேட்டுகளின் கட்டுவித்தைக்கு ஏமா றுவதில்லை. அப்படியானால் அங்கு கு ண்டான மனிதர்களே இல்லையா என கேட்க வேண்டாம். அங்கேயும் கு ண்டானவர்கள் உண்டு தான். ஆனால் பெரும்பாலான மக்கள் மெலிந்து தான் உள்ளார்கள். அவர்களது ஆரோக்கியத்தின் ரகசியத்தை தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். 

japanese-lifestyle Japanese-Cuisine

நாம் காலையில் எழுந்த உடனே டீ, காபி குடிப்பது போல அவர்கள் காலை எழுந்த உடனே கிரீன் டீயை குடிக்கும் வழக்கத்தை கொண்டுள்ளனர். என்னதான் பழவகையான ஹெர்பல் டீயை எடுத்துக்கொண்டாலும் கிரீன்டீக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தொடர்ந்து ஒரு மாதம் பால் டீயை எடுத்துக்கொள்ளாமல் கிரீன் டீயை எடுத்துக்கொள்ளும்போது, என்ன மாற்றம் உ டலில் நடக்கிறது என கண்டிப்பாக தொடர்ந்து கிரீன் எடுத்துக்கொள்பவர்களுக்கு தெரியும். குறிப்பிட்ட காலம் குடிக்கும்போதே, தொங்கும் தொப் பையெல்லாம் மேலேறும். அப்படி இருக்க வாழ்நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இல்லாமல் போவார்கள்? நோ ய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மூ ளைக்கு புத்துணர்ச்சி அளிக்க, கெட்ட கொ லஸ்ட்ராலை குறைக்க என இப்படி பல நன்மைகள் கிரீன் டீயில், உள்ளது.  

japanese-lifestyle Japanese-Cuisine

அடுத்து ஜப்பானியர்களின் உணவு முறையில், ப் ரோடீன், ஓமேகா 3, அத்தியாவசிய கொ ழுப்பு, வி ட்டமின் என ஒருநாளைக்கு உ டலுக்கு தேவையான எல்லாமே இருக்கும். குறிப்பாக அவர்களது காய்கறி வகைகள் அரை வேக்காடாக இருக்கும். அங்குள்ள பள்ளிகள் உணவை எப்படி சரிவிகித உணவாக அதாவது உ டலுக்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களையும் எப்படி எடுத்துக்கொள்ள வேண்டுமென கற்றுக்கொடுக்கிறார்கள். ஆனால் நமது பள்ளிகளில் கேரட்டில் உள்ளது விட்டமின் ஏவா? பியா? என கேள்வித்தாளில் சாய்ஸை குறிக்கும் பொருட்டு தான் சொல்லித்தரப்படுகிறது. 

japanese-lifestyle Japanese-Cuisine

அதோடு என்னதான் அதீத உணவு எடுத்துக்கொண்டாலும் உ டற்பயிற்சி செய்தால், என்ன கொ ழுப்பு உ டலில் சேர போகிறது?  ஜப்பானிய பள்ளி செல்லும் சிறுவர்கள், அலுவலகம் செல்பவர்கள் என பெரும்பாலானோர் சைக்கிளில் தான் பயணம் செய்கிறார்கள். ஒரு நாளில் எப்படியாவது மூன்று மணிநேரத்திற்கு குறைவாக உ டற்பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.  

japanese-lifestyle Japanese-Cuisine

ஜப்பானியர்கள் உணவு உண்டபின் வெந்நீர் கலந்த பானத்தை கண்டிப்பாக அருந்துவார்கள். நமது உணவு வழக்கத்தை தவறு சொல்லவில்லை. விருந்து உண்ட பின் தாம்பூலம் எடுத்துக்கொள்வது அதாவது வெற்றிலை பாக்கு எடுத்துக்கொள்வது நமது வழக்கம். ஆனால் இன்னும் அதே வழக்கம் உள்ளதா? உண்ட உணவு செரிக்க செவன் அப், ஸ்ப்ரைட் போன்றவற்றை தானே எடுத்துக்கொள்கிறோம்? வெற்றிலை என்பது சித்த வைத்தியத்தில் ஒரு வகை மூலிகையாக எடுத்துக்கொள்ளபடுகிறது, நாக்கு சிவக்க மட்டுமா வெற்றிலையோடு சுண்ணாம்பு எடுத்துக்கொள்கிறோம்? 40 வயதான பெண்களுக்கு எ லும்பு தேய்மானம் என்றால் இன்றும் சில ம ருத்துவர்கள் வெற்றிலை பாக்கு போட சொல்கிறார்களே? ஏன்? 

japanese-lifestyle Japanese-Cuisine

ஜீ ரணமாக மட்டுமா வெற்றிலையோடு சுண்ணாம்பு, பாக்கு போடுகிறோம்? இதர ஊட்டச்சத்துக்களுக்கும் தான். நாம் நம்முடைய பழக்கவழக்கங்களில் ஆரோக்கியமான சிலவற்றை பின்பற்றினாலே போதும். நாகரீகம் என்றபெயரில் எதற்காக மேற்கத்திய வழக்கத்தை பின்பற்ற வேண்டும்? அப்படித்தான் ஜப்பானியர்களும் என்னதான் புதுவகை உணவுமுறைகளை அறிமுகபடுத்தினாலும் தங்களுடைய பாரம்பரிய உணவு முறையை விட்டுக்கொடுக்காமல் அன்றாடம் உணவுகளில் சேர்த்து வருகிறார்கள். நாமும் முடிந்தவரை பாரம்பரிய உணவுமுறையை பின்பற்ற முயல்வோம்.