Hugs & Kisses

கூடிய சீக்கிரம் கல்யாணமாக உள்ள பெண், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா? அந்த ஒரே ஒரு வார்த்தை சொல்லி மண்ட காய விட்டாங்க!

Jun 10 2021 04:04:00 PM

ஒவ்வொரு முறை தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், கூடவே சேர்ந்து வதந்தியும் பயணிக்க தொடங்கிவிடுகிறது. இப்போ கொரோனா தடுப்பூசி போடப்படுவதில் மட்டுமல்ல, ஏற்கனவே அம்மை தடுப்பூசி போடத்தொடங்கிய காலத்தில் இருந்து இந்த சிக்கல் இருந்து கொண்டே தான் இருக்கு. இன்னும் அப்பாவுக்கு அம்மை தடுப்பூசி போடப்படவில்லை. அந்தக்காலத்தில், அம்மை தடுப்பூசி போட வராங்க என்றாலே, குழந்தையை தூக்கிக்கொண்டு மறைவான பகுதிக்கு சென்று விடுவார்களாம்.

covid injection. corona

எங்க பாட்டி, குழந்தையாக இருந்த அப்பாவை தூக்கிக்கொண்டு காட்டுப்பக்கம் போனவங்க, தடுப்பூசி வண்டி ஊரை விட்டு கிளம்பும் வரையில், வீட்டுக்கு திரும்பவே இல்லையாம். அந்த மாதிரி, இன்னமும் தடுப்பூசியை கண்டு பயப்படும் மக்கள் இருக்கத்தான் செய்றாங்க. அவங்க போடலைனா கூட பரவாயில்லை. தடுப்பூசி தேவை உள்ளவர்களிடமும், இல்லாதது, பொல்லாதது சொல்லி மனதை மாற்றி விடுகின்றனர். அன்னைக்கு, போலியோ தடுப்பூசி, அம்மை தடுப்பூசி எல்லாம் போட்டதால் தான், இன்னைக்கு அந்த நோய் இருந்த இடமே தெரியாமல் போயிருக்கு.

covid injection. corona

இப்போ புதுசா கொரோனா தடுப்பூசி போட்டா, இரண்டு வருடங்களில் இறந்து விடுவார்கள் என வதந்தி கிளப்பி விட்ருக்காங்க. அதிலும் புதிதாக திருமணமாகப்போகும் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்டால், வாழ்க்கை முழுக்க குழந்தையே பிறக்காதுன்னு எவனோ சொல்லி இருக்கான். ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு, இயற்கையாகவே உடலில் கொரோனா வைரஸை எதிர்க்கும் ஆற்றல் இருந்துள்ளது. 

covid injection. corona

எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம். சமீபத்தில் திருமணமான பெண்கள், திருமணம் ஆகப்போகிற பெண்கள், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என பிளானில் உள்ள பெண்கள் முதல் வேலையாகக் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கொரானா முதல் அலையை விட, இரண்டாவது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கர்ப்பமான முதல் மூன்று மாதங்கள் தடுப்பூசிகள் போட்டு கொள்ள இயலாமல் போகும். அந்த நேரத்தில் கொரானா தொற்று ஏற்பட்டால் ரொம்ப சிரமம். தயங்காமல் இப்போதே ஊசி போட்டுக்கொள்ளலாம்.